85,000 மின்-ஸ்கூட்டர்களில் பெரும்பாலானவற்றுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள 85,000 மின்-ஸ்கூட்டர்களில் பெரும்பாலானவற்றுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என்று இங்குள்ள சில்லறை விற்பனை கடைகள் தெரிவித்துள்ளன. இந்தச் சான்றிதழ்கள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டாயமாக்கப்படும். பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத கிட்டத்தட்ட 80,000 மின்-ஸ்கூட்டர்கள் வரை இருக்கக்கூடும் என்று ‘மோபொட்’ தெரிவித்திருக்கிறது.

2014ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய ‘மோபொட்’ கடை, இதுவரை 15,000 மின்-ஸ்கூட்டர்களை விற்றதாகத் தெரிவித்தது. விற்கப்பட்ட அந்த ஸ்கூட்டர்களில் மூன்று விழுக்காடுதான் பாதுகாப்புச் சான்றிதழைக் கொண்டுள்ளதாக அந்தக் கடை கூறியது.

பதிவு செய்யப்பட்ட மின்-ஸ்கூட்டர்களில் 70 முதல் 80 விழுக்காடு வரையிலான ஸ்கூட்டர்களுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என்று கிட்டத்தட்ட 30 கடைக்காரர்களைப் பிரதிநிதிக்கும் சிங்கப்பூர் சில்லறை விற்பனை கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் புதிய UL2272 தரநிலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்னர் அந்த மின்-ஸ்கூட்டர்கள் வாங்கப்பட்டன. சான்றிதழ் இல்லாத ஸ்கூட்டர்களின் விலை குறைவாகவும் அவற்றுக்கு மின் சக்தி அதிகமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அவற்றை அதிகம் நாடுவதாகக் கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

ஜூலை மாதம் முதல் பாதுகாப்புச் சான்றிதழ்கள் இல்லாத ஸ்கூட்டர்களை விற்க கடைக்காரர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் ஏற்கெனவே இத்தகைய மின்-ஸ்கூட்டர்களை ஜூன் மாதத்திற்குள் வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அடுத்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அவற்றைப் பயன்படுத்த முடியும்.

இதையும் படிக்க: தனிநபர் நடமாட்டச் சாதனங்கள்; எல்டிஏ மறுஆய்வு

அண்மையில் இரண்டு அடுக்குமாடி வீடுகளில் இந்த ஸ்கூட்டர்களை மின்னேற்றம் செய்யும்போது தீச்சம்பவங்கள் நடந்தன. இதில் 40 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கடுத்து UL2272 தரநிலை பற்றிய கலந்துரையாடல்கள் மீண்டும் நடந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!