மரினா ஈஸ்ட்டில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுக்குள் உள்ளது

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நேற்றிரவு மூண்ட பெரும் தீ, இரண்டு காற்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவில் பரவியது.

மரினா ஈஸ்ட் டிரைவிலுள்ள தாவரங்கள் நிறைந்த பகுதியில் ஏற்பட்ட  இந்தத் தீச்சம்பவம் பற்றிய தகவல் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இரவு 8.50 மணிக்குக் கிடைத்தது.

கிட்டத்தட்ட 50 தீயணைப்பாளர்களும் 12 அவசர வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. இரவு கிட்டத்தட்ட 10.30 மணிக்கு அந்தத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.