பிரான்சுக்கு சென்றிருந்த சிங்கப்பூர் ஆகாயப்படை வீரர்கள் மூவர் உட்பட 12 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று

பிரான்சுக்கு சென்றிருந்த சிங்கப்பூர் ஆகாயப்படை வீரர்கள் மூவர் உட்பட 12 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று

1 mins read
3e5fcb5f-ce8d-41d6-9320-5e3f40df7201
எஞ்சி உள்ளோரில் 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (மார்ச் 11) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது; மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 178 ஆனது.

அவர்களில் 96 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். எஞ்சி உள்ளோரில் 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப்படை வீரர்கள். அவர்கள் பணி நிமித்தமாக பிரான்சுக்கு சென்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரும் பிரான்சுக்கு சென்றிருந்த ஆகாயப்படை வீரர் என்று கூறப்பட்டது. இவரையும் சேர்த்து மொத்தம் நான்கு ஆகாயப்படை வீரர்கள் பிரான்சுக்கு சென்றிருந்தபோது கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆகாயப்படை வீரர்கள் உட்பட, இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேருக்கு கிருமித்தொற்று வெளிநாடுகளில் கிருமித்தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதுவரை, ஒரே நாளில் ஆக அதிகமான இறக்குமதி கிருமித்தொற்று சம்பவங்கள் இன்று பதிவாகின.

ஜூரோங் சாஃப்ரா விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றுடன் தொடர்புடைய ஒரு சம்பவம், தொடர்புகள் கண்டறியப்படாத புதிய இரண்டு சம்பவங்கள் போன்றவையும் இன்று பதிவாகியுள்ளன.

#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்