சிங்கப்பூர்: அடுத்த தேர்தலில் 93 எம்.பி. தொகுதிகள்; புதிய குழுத்தொகுதி உருவாக்கம்

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 89லிருந்து 93 ஆக அதிகரிக்க தொகுதி எல்லை மறுஆய்வுக் குழு பரிந்துரைத்து உள்ளது.

அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

அதன்படி தனித்தொகுதிகளின் எண்ணிக்கை 13லிருந்து 14ஆகவும் குழுத்தொகுதிகளின் எண்ணிக்கை 16லிருந்து 17ஆகவும் உயருகின்றன.

மேலும், நான்கு உறுப்பினர்களைக்கொண்ட புதிய செங்காங் குழுத்தொகுதி உருவாக்கப்பட்டு உள்ளது.

செங்காங் வெஸ்ட், பொங்கோல் ஈஸ்ட் தனித்தொகுதிகள் இக்குழுத்தொகுதியுடன் இணைகின்றன.

அதேபோல பாசிர்-ரிஸ் பொங்கோல் குழுத்தொகுதியின் ஒரு பகுதியும் செங்காங் குழுத்தொகுதியுடன் இணையும்.

இந்த மாற்றங்களின் மூலம் பொங்கோல் ஈஸ்ட், செங்காங் வெஸ்ட், ஃபெங்ஷான் ஆகிய மூன்று தனித்தொகுதிகளும் இனி இருக்காது.

ஃபெங்ஷான் தனித்தொகுதி ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குள் அடங்கிவிடும்.

அதேநேரம் நான்கு தனித்தொகுதிகள் புதிதாக இடம்பெறும்.

பொங்கோல் வெஸ்ட், கெபுன் பாரு, மேரிமவுண்ட், இயோ சூ காங் ஆகியன அவை.

இவற்றில் இயோ சூ காங்கும் கெபுன் பாருவும் ஏற்கெனவே தனித்தொகுதிகளாக இருந்தவை.

அங் மோ கியோ குழுத் தொகுதியிலிருந்து இயோ சூ காங்கும் நீ சூன் குழுத்தொகுதியில் இருந்து கெபுன் பாருவும் வெளியே எடுக்கப்படுகின்றன.

இந்த மாற்றங்களின் மூலம் இனி ஆறு உறுப்பினர் குழுத்தொகுதி இருக்காது.

பிரதமர் லீ சியன் லூங் பொறுப்பேற்றிருக்கும் அங் மோ கியோ, மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் பொறுப்பேற்றிருக்கும் பாசிர் ரிஸ்-பொங்கோல் ஆகிய ஆறு உறுப்பினர் குழுத்தொகுதிகள் இனி ஐந்து உறுப்பினர் குழுத்தொகுதிகளாக மாறும்.

அதேநேரம், ஐந்து உறுப்பினர்குழுத்தொகுதி எண்ணிக்கை 8லிருந்து 11க்கு உயரும். ஆயினும் நான்கு உறுப்பினர் குழுத்தொகுதி எண்ணிக்கை ஆறு என்பதில் மாற்றம் இல்லை.

இந்த மாற்றங்களால் ஒவ்வொரு குழுத்தொகுதிக்குமான சராசரி நாடாளுமன்ற உறுப்பினர் விகிதம் 4.75 என்பதிலிருந்து 4.65க்குக் குறையும். சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதி வேகமாக வளர்ந்து வருவதைக் கருத்தில்கொண்டு தொகுதி எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதி மாற்றங்கள் வரும் பொதுத்தேர்தலில் நடப்புக்கு வரும்.

2021ஆம் ஆண்டு ஏப்ரலுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சிங்கப்பூரில் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை 2,594,740. 2015 பொதுத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை 2,460,484 ஆக இருந்தது.

தொகுதிகள் பற்றிய முழு விவரங்களுக்கு நாளைய (மார்ச் 14) தமிழ் முரசின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #பொதுத்தேர்தல் #தொகுதி எல்லை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!