சிங்கப்பூரில் புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இன்று (மார்ச் 14) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் ஒருவர் சாஃப்ரா ஜூரோங் குழுமத்துடன் தொடர்புடையவர்; 9 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்; ஒருவர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்; ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 212.
இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறிய 8 பேரையும் சேர்த்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 105. எஞ்சியுள்ள 107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மற்றவர்களின் உடல்நலம் தேறியோ, மேம்பட்டோ வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர்

