'சிங்கப்பூரில் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்'

வெளிநாடுகளிலிருந்து கிட்டத்தட்ட 200,000 சிங்கப்பூரர்கள் நாடு திரும்பும் சூழலில் வரும் வாரங்களில் இங்கு கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் பதிவான கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இருமடங்குக்கு மேல் ஆகியுள்ளதாக அவர் சுட்டினார்.

இதன்படி ஒரு வாரத்திற்கு முன் இருந்த 266 சம்பவங்கள் தற்போது 558 ஆகியுள்ளன.

“புதிதாக உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் கிட்டத்தட்ட 80%, சீனாவைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு ஏற்பட்டவை. 

“சீனாவிலிருந்து சுமார் 1,000 சிங்கப்பூரர்வாசிகள் மற்றும் நீண்டகால வருகை அனுமதி அட்டை உடையோர் கடந்த ஒரு வாரத்தில் இங்கு வந்துள்ளனர்,” என்றும் அமைச்சர் கான் பகிர்ந்துகொண்டார்.

வெளிநாடுகளிலிருந்து வந்து கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்படுவோர் பெரும்பாலும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தோனீசியாவிலிருந்து வந்தவர்கள் என்றார் அவர்.

நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 25)  தம் அமைச்சுநிலை அறிக்கையை வெளியிட்ட திரு கான் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

இதில் கொவிட்-19 கிருமித்தொற்று பரவலை மெதுவடையச் செய்ய, சிங்கப்பூர் மூன்று படிகள் அடங்கிய அணுகுமுறையைப் பயன்படுத்தியதாக அவர் சொன்னார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (மார்ச் 26) அச்சுப்பிரதியை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #கொரோனா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!