'பாதுகாப்பான இடைவெளி' விதிமுறைகள் நடப்புக்கு வந்தன; மீறினால் அபராதம், சிறை

பொது இடங்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவர் வேண்டுமென்றே, பாதுகாப்பான இடைவெளியான 1 மீட்டர் இடைவெளியைவிட குறைவாக அமர்ந்தாலோ அல்லது வரிசையில் நிற்கும்போது 1 மீட்டர் இடைவெளிவிடாமல் நின்றாலோ அது குற்றமாகக் கருதப்படும்.

தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ள இந்த விதிமுறையை மீறியதன் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், $10,000 வரையிலான அபராதமோ, ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த விதிமுறை நேற்று (மார்ச் 26) இரவு அரசிதழில் சேர்க்கப்பட்டது.

நேற்று இரவு 11.59 மணிக்கு இந்தப் புதிய விதிமுறை நடப்புக்கு வந்தது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அமைச்சுகள்நிலை பணிக்குழு கடந்த செவ்வாய்க்கிழமை மக்களுக்கு இடையே தூர இடைவெளி விடுவது குறித்து சில கட்டாய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது.

அதன் ஒரு பகுதியாக இந்த விதிமுறை நடப்புக்கு வந்துள்ளது.

வேலையிடங்களையும் பள்ளிகளையும் தவிர்த்து, பத்து பேருக்கு மேல் வெளியில் ஒன்றுகூடக்கூடாது.

காப்பிக் கடைகள், உணவகங்கள், கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

உலகளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530,000ஐ கடந்துவிட்டதோடு கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000ஐ தாண்டிவிட்ட நிலையில், கிருமித்தொற்றைத் தடுக்க பல நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இன்று (மார்ச் 27) தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனைத்து விளையாட்டு நிகழ்வுகள், கண்காட்சிகள், வர்த்தக நிகழ்ச்சிகள், திரையரங்குகள், கணினி விளையாட்டு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கேளிக்கை நிகழ்வுகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட காலகட்டத்தில் 18 வயது அல்லது அதற்கு கீழ் வயதுடைய பிள்ளைகளுக்குத் துணைப்பாட அல்லது செறிவூட்டும் வகுப்புகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மதுபானக் கூடங்களும் பொழுதுபோக்குக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தடை விதிக்கப்படாத நிகழ்ச்சிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்கள், 10 பேருக்கும் அதிகமானோர் கூடுவதை அனுமதிக்கக்கூடாது.

வேலையிடங்கள், கல்விக் கழகங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!