சிங்கப்பூரில் புதிதாக 70 பேருக்கு தொற்று; 41 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

சிங்கப்பூரில் புதிதாக 70 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இன்று (மார்ச் 28) உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 802 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 41 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு அல்லது ஆசியாவின் இதர பகுதிகளுக்குச் சென்றவர்கள்.

நீண்ட காலம் தங்கும் அனுமதி அட்டை, மாணவர் அனுமதி அட்டை, வேலை அனுமதிச் சீட்டு ஆகியவற்றை வைத்து அல்லது அதற்கான கொள்கை அடிப்படையிலான அனுமதி பெற்று வெளிநாடுகளில் இருபோர் சிங்கப்பூருக்கு வர விரும்புவோர், அங்கிருந்து பயண ஏற்பாடுகளைச் செய்வதற்கு முன்பு உள்ளே நுழைவதற்கான அனுமதி பெற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் சிங்கப்பூரில் ஒரே நாளில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஃபெங்ஷான் பகுதியில் உள்ள பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர் பள்ளியுடன் தொடர்புடைய கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்தவர் ஒருவர். இதனையும் சேர்த்து மொத்தம் 26 பேர் இந்தக் குழுமத்தில் உள்ளனர்.

நேற்று அறிவிக்கப்பட்ட சிங்போஸ்ட் நிலைய கிருமித்தொற்று குழுமத்தின் தொடர்பில் மேலும் இருவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்ந்து அந்த குழுமத்தில் மொத்தம் ஐவருக்கு கிருமித்தொற்று உள்ளது.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் உள்ளூரில் கிருமித்தொற்று கண்டவர்கள் 29 பேர். அவர்களில் 14 பேருக்கு முந்தைய கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்பில்லை; தடமறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் சேர்த்து இதுவரை 198 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயினும் 420 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கிருமித்தொற்றுகண்ட, ஆனால் நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 182 பேர் கன்கார்ட் அனைத்துலக மருத்துவமனை, மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை, சமூகத் தனிமைப்படுத்தும் வளாகமான டி’ரிசோர்ட் என்டியுசி ஆகிய இடங்களில் தனிமையில் பராமரிக்கப்படுகின்றனர்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான செய்திகளுக்கு தமிழ் முரசு இணையப்பக்கத்தை நாடுங்கள்!

#சிங்கப்பூர் #கொவிட்-19

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!