கொவிட்-19: சிங்கப்பூரில் தொடர்ந்து செயல்படும் அத்தியாவசிய சேவைகளின் பட்டியல்

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை வலியுறுத்தும் பொருட்டு சிங்கப்பூர் மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டுவர உள்ளது.

இதன் தொடர்பில் முக்கிய பொருளியல் துறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிரப் பெரும்பாலான வேலையிடங்களும் சில்லறை வர்த்தகக் கடைகளும் அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும்.

தொடர்ந்து செயல்படவுள்ள சேவைகள் யாவை என்ற பட்டியலில் சில:

சுகாதார மற்றும் சமூக சேவைகள்:

- நிபுணத்துவ மருந்தகங்கள், சமூக மருத்துவமனைகள், அறுவை சிகிச்சை நிலையங்கள் உட்பட அனைத்து மருத்துவமனைகளும் திறந்திருக்கும்.

- பலதுறை மருந்தகங்கள், தனியார்த் துறையில் உள்ள அடிப்படை பராமரிப்பு சேவைகள், அவசரகால பல் மருத்துவச் சேவைகள் போன்றவை தொடர்ந்து இயங்கும்.

- சமூகப் பராமரிப்புச் சேவைகளும் தொடர்ந்திடும்.

- மேலும் ரத்த நன்கொடை தொடர்பான சேவைகள், கொவிட்-19 தொடர்பான ஆராய்ச்சிகள், மருந்துக் கடைகள், மருத்துவம் மற்றும் நோயாளிகளுக்கான போக்குவரத்துச் சேவைகள், மருத்துவப் பொருட்களின் விநியோகம் போன்றவையும் நிறுத்தப்படாது.

- அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் பெற்றோரின் பிள்ளைகள் உட்பட பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள், சிறப்புத் தேவைப் பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவர்களுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட பராமரிப்புச் சேவைகளும் தொடரும்.


உணவு தொடர்பான சேவைகள்:

- உணவு மற்றும் உணவுப்பொருட்களின் உற்பத்தி, அவற்றைப் பதனிடுவது, அவற்றின் இறக்குமதி மற்றும் வர்த்தகம், உணவுத் தளவாடங்கள், உணவு சேமிப்புக் கிடங்குகளும் தொடர்ந்து இயங்கும்.

- பேரங்காடிகள், மளிகைக் கடை வியாபாரம், மொத்த வியாபாரச் சந்தைகள், ஈரச்சந்தைகள் ஆகியவையும் திறந்திருக்கும்.

- உணவுக்கடைகள், உணவகங்கள், அவற்றுக்கான மத்திய சமையலறைகள், உணவு விநியோகச் சேவைகள் அனைத்தும் தொடரும்.

போக்குவரத்துச் சேவைகள்:

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இயங்கும்.

டாக்சிகள், தனியார் வாடகை வாகனங்களின் சேவைகளும் தொடர்ந்திடும்.

ஆகாயப் போக்குவரத்து தொடர்பிலான சேவைகள், ஆகாய போக்குவரத்து கட்டுப்பாடு, ஓடுபாதைக்கான பராமரிப்புப் பணிகள், துறைமுகம் மற்றும் முனையங்களின் செயல்பாடு தொடரும்.

வங்கி மற்றும் நிதிச் சேவைகள்

- நாணய மற்றும் நிதி நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கான நிதி மற்றும் வங்கி தொடர்பான சேவைகள் தொடரும்.

- பணத்தை வங்கி இயந்திரங்களிலிருந்து பெற்றுக்கொள்வதும் இயந்திரங்களுக்குள் இடுவதும் தொடர்ந்து நடந்திடும்.

- மேலும் காப்புறுதிச் சேவைகளும் தொடர்ந்திடும்.

மற்ற சேவைகள்

- இணைய வர்த்தகமும் அதன் தொடர்பிலான விநியோகமும் தொடர்ந்திடும்.

- முடி வெட்டும் சேவைகள், கண் பரிசோதனை தொடர்பான சேவைகள் ஆகியவையும் அடிப்படை அளவில் இயங்கிடும்.

- வீட்டில் ஏற்படக்கூடிய அவசரப் பழுதுபார்ப்புத் தேவைகளுக்கு மட்டும் அந்தந்த வீட்டுப் பொருட்களைச் சரிசெய்வதற்கான நிபுணர்கள் சேவை வழங்கிடலாம்.

-கால்நடைகளுக்கான சேவைகள், செல்லப்பிராணிகளுக்கான உணவு வழங்கிடும் சேவைகள் செயல்படலாம்.

அத்தியாவசியச் சேவைகள் யாவை என்பது பற்றிய முழுமையான பட்டியலுக்கு https://covid.gobusiness.gov.sg/essentialservices/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!