அதிகரிக்கும் கிருமித்தொற்று; சிங்கப்பூர் எக்ஸ்போவில் தனிமைப்படுத்தும் வளாகம் உருவாக்கம்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று குழுமங்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையடுத்து, பொது மருத்துவமனைகளில் படுக்கைகளைக் காலியாக வைத்திருக்க வேண்டிய தேவை உடனடியாக ஏற்பட்டுள்ளது.

குணமாகிவரும் நோயாளிகளை பொது மருத்துவமனைகளிலிருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றும் நடவடிக்கை, கடந்த வாரத்திலிருந்து தினசரி அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

கிருமித்தொற்று கண்ட, ஆனால், நலமாக இருப்பவர்களை தனியார் மருத்துவமனைகள், டி’ரிசோர்ட் என்டியுசி போன்ற வளாகங்களுக்கு தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையங்களிலிருந்து மாற்றும் பணி கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இப்போது, மற்றுமொரு பெரிய சமூக தனிமைப்படுத்தும் வளாகம் வேகமாக உருவாக்கப்படுகிறது. சிங்கப்பூர் எக்ஸ்போவில் உருவாகும் அந்த வளாகம், அண்மையில் ஏற்படக்கூடும் என்று ஊகிக்கப்படும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களை மனதில்கொண்டு உருவாக்கப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை சிலர் சிங்கப்பூர் எக்ஸ்போவில் உள்ள இந்த இடத்துக்கு மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைஸ் குறிப்பிட்டது.

குணமடைந்து வருவோருக்கு ஒரு கூடமும், மிகச் சிறிய அளவில் அறிகுறிகளுடன் இருப்போருக்கு மற்றொரு கூடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்படும் நோயாளிகள் அங்கு தங்கவைக்கப்படலாம் என்றும் உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பும் வரை அவர்கள் அங்கிருப்பர் என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது. உடல் நிலை மோசமடைந்தால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படலாம்.

கொவிட்-19 வேகமாகப் பரவக்கூடும்; ஆனால் கிட்டத்தட்ட 80% நோயாளிகளுக்கு தாக்கம் சிறிய அளவில்தான் இருக்கும் என்பதால் பிரிட்டன், ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின், சீனா, மலேசியா ஆகிய நாடுகள் கண்காட்சிக் கூடங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றின.

கடந்த இரு வாரங்களில் சிங்கப்பூரிலும் கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 106 சம்பவங்கள் பதிவாகின; மார்ச் முதல் தேதி வரை சிங்கப்பூரில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை அது.

தற்போது சிங்கப்பூரில் மொத்தம் 1,623 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்திலிருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட நோயாளிகளின் உடல்நிலை தேறி வந்தாலும் அவர்கள் கிருமித்தொற்று கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய சூழல். அவர்களைக் கண்காணிக்கும் மருத்துவ ஊழியர்கள் வேறு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருப்பதாக பார்க்வே பந்தாய் சுகாதார பராமரிப்புக் குழும மருத்துவமனை நடைமுறைகளின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் நோயல் இயோ கூறினார்.

மூன்று பார்க்வே மருத்துவமனைகள் கிருமித்தொற்று கண்ட 75 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மவுண்ட் எலிசபெத், மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனை, கன்கார்ட் இன்டர்நேஷனல் மருத்துவமனை, கிளனிகள்ஸ் ஆகிய மருத்துவ மனைகளுக்கும் தேசிய தொற்று நோய்கள் மருத்துவமனையிலிருந்து கிருமித்தொற்று நோயாளிகள் மாற்றிவிடப்பட்டுள்ளனர்.

ஏ*ஸ்டார் ஃபார்டிட்யூட் பரிசோதனைக் கலன்களைக் கொண்டு கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு அனுமதித்துள்ள முதல் தனியார் பரிசோதனைக்கூடம் பார்க்வேஹெல்த் பரிசோதனைக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 3ஆம் தேதியிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டிருப்பதாக டாக்டர் இயோ குறிப்பிட்டார்.

30 வயதுக்குட்பட்ட, சிறிய அளவிலான கிருமித்தொற்று தாக்கம் கொண்ட 15 நோயாளிகள் மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மாற்றப்பட்டனர்.மேலும் 20 நோயாளிகள் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஃபேரர் பார்க்கில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் 26 படுக்கைகளைக் கொண்ட ஒரு தளம் கொவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; அடுத்த சில நாட்களில் அங்கு நோயாளிகள் மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் இந்த தனியார் மருத்துவமனைகள் தேறிவரும் நோயாளிகளுக்குத் தொடர்ந்து பராமரிப்புச் சேவை வழங்கும்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!