சிங்கப்பூரில் புதிய உச்சம்: ஒரே நாளில் 287 பேருக்குக் கிருமித்தொற்று

இதற்குமுன் இல்லாத அளவில், இன்று (ஏப்ரல் 9) ஒரே நாளில் சிங்கப்பூரில் புதிதாக 287 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

அவற்றுள் 219 சம்பவங்கள் ஏற்கெனவே அடையாளப்படுத்தப்பட்ட கிருமித்தொற்றுக் குழுமங்களுடன் தொடர்புடையவை என்றும் பெரும்பாலான சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிலும் பொங்கோலில் உள்ள எஸ்11 தங்கும் விடுதியில் மட்டும் 166 சம்பவங்கள் பதிவாகின. இதையடுத்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,910ஆக அதிகரித்தது.

இன்றைய சம்பவங்களில் மூன்று மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்புடையவை. எஞ்சியவற்றில் 19 சம்பவங்கள், முந்தைய பாதிப்புகளுடன் தொடர்புடையவை; 46 பேர் எந்த வகையிலும் தொடர்பில் இல்லாதவர்கள்.

தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து 314 பேர் விடுவிக்கப்பட்டனர். 705 பேர் சமூகத் தனிமைப்படுத்தல் இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமித்தொற்றுச் சூழலைக் கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவிற்கு தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டியோ சீ ஹியன் தலைமை தாங்கவிருக்கிறார்.

அந்தப் பணியில் சிங்கப்பூர் போலிஸ் படையும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் உதவி வருகின்றன.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரும் தேசிய வளர்ச்சி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

தங்கும் விடுதிகளில் கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, நல்ல உடல்நிலையுடன் காணப்படும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், குறிப்பாக அத்தியாவசிய சேவைத் துறைகளில் பணியாற்றுவோர், ராணுவ முகாம்களுக்கும் ஹோட்டல்களுக்கும் காலியாக உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகளுக்கும் மாற்றப்படவுள்ளனர்.

பல்வேறு தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று பாதிப்புள்ளவர்களைக் கண்டறியும் பணியும் ஊழியர்களிடத்தில் நாசித் திரவ, எச்சில் பரிசோதனை மேற்கொள்ளும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.

புரொஜெக்ட் குளோரி கட்டுமானத் தளம் மற்றும் ஐந்து வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பதிவான சம்பவங்களுக்கும் முஸ்தபா பேரங்காடிக்கும் இடையே தொடர்பிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முஸ்தபாவுக்குச் சென்றிருந்த வெளிநாட்டு ஊழியர்களில் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர்கள் மூலம் சக ஊழியர்கள் சிலரைத் தொற்றி, பின்னர் தங்கும் விடுதிகளிலும் பரவியதாக இணைப் பேராசிரியர் மாக் கூறினார்.

“அவர்களில் பலருக்கும் லேசான அறிகுறிகளே இருந்ததால் அவர்கள் தொடர்ந்து வேலை செய்துவந்தனர். சில காலமாகவே வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமி பரவியபடி இருந்திருக்கலாம்,” என்று அமைச்சர் வோங் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதிகளில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும் சமூக அளவில் அது சீராக இருப்பதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

“இது மிகப் பெரிய, அவசரமான, அதிகமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினை என்பதால் அதிகமான வளங்களைப் பயன்படுத்தவும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்துவதற்காக தனியாக ஒரு பணிக்குழுவை அமைக்கவும் முடிவுசெய்தோம்,” என்றும் அவர் சொன்னார்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 10) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpac…

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!