சிங்கப்பூரில் 10வது நபர் உயிரிழப்பு; S11 தங்கும் விடுதியில் தொற்று எண்ணிக்கை 700ஐ தாண்டியது

சிங்கப்பூரில் கொவிட்-19 சிக்கல்களால் உயிரிழந்த 10வது நபர் 70 வயது சிங்கப்பூர் ஆடவர்.

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 128வது நபரான அவர், சாஃப்ரா ஜூரோங் கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவர். பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ஜாய் கார்டன் உணவகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு, மார்ச் 6ஆம் தேதி கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார்.

அவரது குடும்பத்துக்கு வேண்டிய உதவிகளை நிலையம் செய்து வருவதாக் சுகாதார அமைச்சு நேற்று (ஏப்ரல் 14) அன்று வெளியிட்ட செய்தி தெரிவித்தது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 334 பேரில் 198 பேருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் வேலை அனுமதிச்சீட்டுடன் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போர்.

அவர்களில் ஒருவர் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட 10 சம்பவங்களுடன் தொடர்புடையவர். இதனையடுத்து, 8 சிலேத்தார் நார்த் லிங்கில் இருக்கும் பிபிடி லாட்ஜ் 1A வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி புதிய குழுமமாக உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூரின் ஆகப் பெரிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்துள்ள S11 தங்கும் விடுதி பிபிடி லாட்ஜ் 1B என்றும் அழைக்கப்படும். அங்கு புதிதாக 132 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நேற்றைய நிலவரப்படி மொத்தம் 718 பேர் கிருமித்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

சுங்கை தெங்கா லாட்ஜில் நேற்று புதிதாக 32 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதையடுத்து அங்கு பாதிப்புக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 188 ஆனது.

கிருமித்தொற்றுக்கு உள்ளான வேறு 22 பேரில் 10 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள்; 12 பேர் வேலை அனுமதிச்சீட்டுடன் இங்கு பணிபுரிபவர்கள்.

நேற்று பதிவான 114 புதிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

அவர்களில் 24 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்; 85 பேர் அனுமதிச்சீட்டுடன் இங்கு வேலை செய்பவர்கள்; மூவர் S பாசுடன் இங்கு பணிபுரிவோர்; ஒருவர் எம்ப்ளாய்மென்ட் பாசில் பணிபுரிபவர்; இங்கு வசிப்போரைச் சார்ந்திருக்கும் ஒரு நபர்.

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணிபுரிவோர் இருவருக்கும் சிங்கப்பூரில் கிருமித்தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணிபுரிய்வும் 22 வயது தாதிக்கு அறிகுறிகள் ஞாயிற்றுக்கிழமை தென்பட்ட நிலையில், திங்கட்கிழமை கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், ஏற்கெனவே கிருமித்தொற்று கண்ட இருவரின் குடும்ப உறுப்பினர். அறிகுறிகள் தென்பட்ட பிறகு அவர் பணிக்குச் செல்லவில்லை.

டான் டோக் செங் மருத்துவமனையில் பணிபுரியும் 41 வயது மருத்துவர் இங்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றொரு சுகாதாரப் பணியாளார். ஏப்ரல் 9ஆம் தேதி அறிகுறிகள் தென்பட்ட இவருக்கு, திங்கட்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் இவர், அறிகுறிகள் தென்பட்ட பிறகு பணிக்குச் செல்லவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!