சிங்கப்பூரில் 5,000ஐ தாண்டிய கொவிட்-19 சம்பவங்கள்; பெரும்பாலானவை விடுதியில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை

சிங்கப்பூரில் 5,000ஐ தாண்டிய கொவிட்-19 சம்பவங்கள்; பெரும்பாலானவை விடுதியில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை

1 mins read
24fc0a07-fb10-49db-a8f8-9359f3b5cfe5
நேற்று புதிய கிருமித்தொற்று குழுமமாக உருவெடுத்தவற்றுள் ஒன்று உட்லண்ட்சில் இருக்கும் எஸ் ஜே ஊழியர் தங்கும் விடுதியும் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 17) 623 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில்தான் இன்றும் அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 5,050 ஆகியுள்ளது.

சிங்கப்பூரில் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் (இன்றிரவு) அறிவிக்கப்படும் என்று அமைச்சின் செய்தி குறிப்பிட்டது.

கிருமித் தொற்று காரணமாக இது வரை பத்துப் பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

கடந்த இரு வார நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த மாத இறுதிக்குள் குறைந்தது 10,000 முதல் 20,000 வெளிநாட்டு ஊழியர்களை கிருமி பாதித்துவிடக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரிவித்து இருக்கிறார்.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

குறிப்புச் சொற்கள்