இன்று (ஏப்ரல் 18) நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 942 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும், வேலை அனுமதிச்சீட்டு கொண்ட ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
உள்ளூரில் சமூகப் பரவல் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், அந்த வகையில் இன்று சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 14 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டது.
இதன் தொடர்பிலான மற்ற விவரங்கள் பின்னர் தெரியவரும்.


