சிங்கப்பூரில் மேலும் 931 பேருக்கு கொவிட்-19

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 26) நண்பகல் நிலவரப்படி, புதிதாக 931 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,624 ஆகியுள்ளது.

புதிய சம்பவங்களில் 15 சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

கடந்த இரு நாட்களாக கிருமித்தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையின் இன்று அது கிட்டத்தட்ட 1,000ஐ நெருங்கியுள்ளது.

உள்ளூர் சமூகத்திலும் அந்த எண்ணிக்கை இன்று சற்று அதிகரித்துள்ளது.

சுமார் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து உள்ளூர் சமூகத்தில் கிருமிப்பரவல் எண்ணிக்கை குறைந்தால், சமூகத்தில் ஏற்பட்டுவரும் கிருமித்தொற்று நிலை மாறியிருப்பதாகக் கொள்ளலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

நேற்று சமூகத்தில் 9 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகியிருப்பது ஆறுதல் அளிக்கக்கூடிய ஒன்று.

நேற்று ஊழியர் தங்கும் விடுதிகளிலும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 597க்கு குறைந்தன. கடந்த ஐந்து நாட்களில் அந்த சராசரி எண்ணிக்கை 1,000ஐ தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதத்திம் முதல் வாரம் வரை சமூகத்தில் கிருமிப் பரவல் தொடர்ந்து குறைய வேண்டும் என்று கருத்துரைத்த நிபுணர்கள், அதற்குப் பிறகும்கூட ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள கிருமித்தொற்று குழுமங்கள் சவாலாகவே இருக்கும் என்றனர்.

வரும் வாரத்தில், உள்ளூர் சமூகத்தில் கிருமிப் பரவல் ஐந்துக்கும் குறைவாக இருந்து, பின்னர் மே மாதத்தின் முதல் வாரத்தில் அது பூச்சியமாக வேண்டும் என்று விரும்புவதாக மவுன்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையின் தொற்று நோய்கள் தடுப்பு நிபுணர் டாக்டர் லியோங் ஹோ நாம்.

“அதன் பிறகுதான், சமூகத்தில் நாம் கிருமித்தொற்று பரவலிலிருந்து விடுபட்டுள்ளதாகக் கருத முடியும்,” என்றார் அவர்.

குறைந்துவரும் கிருமிப் பரவலை உறுதிப்படுத்த ஓரிரு வாரங்களுக்கான தரவுகள் தேவைப்படும் என்று டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளியின் தொற்றுநோய்கள் தடுப்புத் திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் வாங் லின்ஃபா குறிப்பிட்டார்.

எத்தனை பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியாமல் புதிதாக கிருமித்தொற்று காண்பவர்களின் எண்ணிக்கையைக் கணிப்பது சிரமம் என்யூஎஸ் யூங் லூ லின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் பால் தம்பையா கூறியுள்ளார்.

பலதுறை மருந்தகங்கள், தனியார் மருந்தகங்கள் ஆகியவற்றில் கடுமையான காய்ச்சல், நிமோனியாவுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையையும் சுகாதார அமைச்சு கவனித்து வருகிறது.

சில ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித் தொற்று பரிசோதனைகள் குறைக்கப்பட்டிருப்பதும் அண்மைய நாட்களில் கிருமித்தொற்று குறைவாகக் கண்டறியப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!