சிங்கப்பூரில் கொவிட்-19 விதிகளை மீறியதாக 10 இந்திய நாட்டவர் மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதிகளை மீறியதாக மூன்று பெண்கள் உள்ளிட்ட பத்துப் பேர் மீது இன்று (மே 22) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தேநீர் அருந்தவும் கூடிப்பேச அல்லது படிக்கவும் விதிகளுக்குப் புறம்பாக வாடகை வீடு ஒன்றில் ஒன்று திரண்டது தொடர்பானவை அந்தக் குற்றச்சாட்டுகள்.

இம்மாதம் 5ஆம் தேதி 34ஏ கிம் கியட் ரோடு முகவரியில் வாடகைக்குத் தங்கி இருந்த மூவர், சமூக நோக்கங்களுக்காக ஏழு பேரை தங்கள் வீட்டுக்கு அழைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சமூக நோக்கங்களுக்காக வேறு வீட்டாரைச் சென்று சந்திப்பது கொவிட்-19 விதிமுறைகளின்கீழ் குற்றமாகும். ஆறு மாதம் வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன இந்தக் குற்றத்துக்கு விதிக்கப்படலாம்.

வாடகை வீட்டில் தங்கி இருந்தோரின் பெயர் விவரம் வெளியிடப்பட்டது. அவினாஷ் கோர், 27, நவ்தீப் சிங், 20, சஜன்தீப் சிங், 21 ஆகிய அம்மூவரும் இந்திய நாட்டவர்.

அதேபோல அவர்களது வீட்டிற்குச் சென்ற ஏழு பேரும் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். ஆர்பிட் குமார், 20, புல்லார் ஜஸ்டீனா, 23, கரம்ஜித் சிங், 30, முகம்மது இம்ரான் பாஷா, 26, ஷர்மா லூகேஷ், 21, விஜய் குமார், 20 மற்றும் வாசீம் அக்ரம், 33, ஆகியோர் அவர்கள்.

புல்லார் ஜஸ்டீனை இம்மாதம் 5ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் தமது வீட்டுக்குள் படிக்க அனுமதித்ததாக அவினாஷ் மீதும் படிக்கவும் பள்ளிப் பாடங்களைத் தயார் செய்யவும் அவினாஷைச் சந்தித்ததாக புல்லார் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அதே நாள் காலை 9 மணியளவில் அதே வீட்டில் தேநீர் அருந்தியவாறே பேசுவதற்காக வாசீம், ஆர்பிட் மற்றும் முகம்மது இம்ரான் ஆகியோரை அனுமதித்ததாக நவ்தீப் மீது குற்றம் சாட்டப்பட்டது.

மூன்றாவது வாடகைதாரரான சஜன்தீப் மீதும் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே காலை நேரத்தில் விஜய், கரம்ஜித், ஷர்மா ஆகியோரை தேநீர் அருந்தவும் பேசவும் வீட்டுக்குள் அனுமதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சிங்கப்பூரில் நடப்பில் உள்ள கொவிட்-19 விதிமுறைகள் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கரம்ஜித்தும் இம்ரானும் கூறினர். சிங்கப்பூரின் விதிகளை மீறும் நோக்கத்துடன் செயல்படவில்லை என்று கூறிய புல்லார், தாம் ஒரு மாணவி என்பதால் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த இயலாது என்று நீதிமன்றத்தில் கூறினார்.

வாடகைதாரர்கள் மூவரும் ஜூன் 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றம் வரவேண்டும். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளப்போவதாக அவர்கள் கூறினர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!