ஊழியர் விடுதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

ஊழியர் விடுதியில் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

1 mins read
542f7f7e-c487-40da-9221-165bb38cbc97
மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது (நடுவில்), உட்லண்ட்ஸ் தங்கும் விடுதிக்குச் சென்று உணவுப் பொட்டலங்களை வழங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் வசிக்கும் சுமார் 200,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேற்று இறைச்சி, கோழி எனச் சிறப்பு விருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பல இடங்களில் வாழும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் பலகாரங்களும் தேடி வந்தன.

கொண்டாட்ட உணர்வை வெளிநாட்டு ஊழியர்களிடையே பரப்பும் நோக்கில் வீட்டில் தாங்கள் தயாரித்த பலகார வகைகளை, 15 வர்த்தகர்கள் கொடுக்க முன்வந்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கும் பணிக்குழு, முயிஸ் மற்றும் சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழில் சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

வேறு நாட்டில் இருப்பதால் தாங்கள் மறக்கப்பட்ட உணர்வை ஊழியர்கள் பெறாத வண்ணம் இத்திட்டம் உள்ளது என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கூறினார்.

உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக சில ஊழியர்கள் தங்களின் பாரம்பரிய உடைகளில் வந்திருந்தனர். ஆனால் முகக்கவசத்தை அணிய மறக்கவில்லை. அறைகளிலேயே இறை வழிபாடு செய்தனர். இணையத்தில் முஃப்தியின் நோன்புப் பெருநாள் சொற்பொழிவைப் பார்த்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்