சிங்கப்பூரில் மேலும் 533 பேருக்கு கொவிட்-19; இதுவரை பாதிக்கு மேற்பட்டோர் குணமடைந்தனர்

சிங்கப்பூரில் இன்று (மே 27) மேலும் 533 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள்.

இன்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் 32,876 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சுகாதார அமைச்சு நேற்றிரவு வெளியிட்டது.

அதில், கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகள், கொரோனா கிருமி அவர்களிடமிருந்து பரவக்கூடிய உடல்நிலையில் இருந்தபோது, புளோக் 963 ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91ல் இருக்கும் ஈரச்சந்தை, ஜூரோங் பாயின்டில் இருக்கும் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா ஆகிய இடங்களுக்குச் சென்றதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் அங்கு இருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் ஜூரோங் பாயின்டில் உள்ள ஃபேர்பிரைஸ் கடை, ஷொகுட்சு டென் ஜப்பானிய உணவுக் கடை ஆகியவற்றின் பெயரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சு அறிவித்தது.

அந்த இடங்களுக்குச் சென்றவர்கள் தங்களது உடல் நலத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்கு அணுக்கமாகக் கண்காணிப்பதுடன், அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட ஈரச் சந்தைக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், இம்மாதம் 24ஆம் தேதி காலை 6 முதல் 8 மணி வரை சென்றிருந்தார். அதே நாளில் பிற்பகல் 1 முதல் 2 மணிக்குள்ளாக, கொரோனா கிருமித்தொற்று கண்ட ஒருவர் ஜூரோங் பாயின்ட் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைக்குச் சென்றிருந்தார்.

நேற்று (மே 26) சிங்கப்பூரில் 383 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் சிங்கப்பூரர்; 30 வயதான அவருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அவர் பாலர் பள்ளி நிலைய ஊழியருடன் தொர்புடையவர் அல்ல.

மற்றொருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் மலேசியர். கொவிட்-19 உறுதி செய்யப்பட்ட மலேசியர் உயர் கல்விக் கழகத்தின் பணியாளர்.

மற்ற 381 பேர் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.

நேற்று குணமடைந்த 706 பேரையும் சேர்த்து, 50 விழுக்காட்டுக்கும் அதிகமான அதாவது மொத்தம் 16,435 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!