சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூரில் புதிதாக 408 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று

சிங்கப்பூரில் இன்று புதிதாக 408 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,000ஐ கடந்துவிட்டது. இதுவரை மொத்தம் 35,292 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களாவர். சமூக அளவில் எவருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை.

இதுகுறித்த மேல் விவரங்களைச் சுகாதார அமைச்சு இன்றிரவு வெளியிடும். 

கடைசியாக பிப்ரவரி 23ஆம் தேதிதான் சிங்கப்பூரில் சமூக அளவில் எவருக்கும் கிருமித்தொற்று பதிவாகவில்லை.

இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் மரின் பரேட் பகுதியில் உள்ள பார்க்வே பரேட் கடைத்தொகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon