சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19 நோயாளிகள் ஷெங் சியோங், ஃபேர்பிரைஸ் கடைகளுக்குச் சென்றனர்; புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று அறிவிப்பு

இரண்டு ஷெங் சியோங் பேரங்காடிகள், ஒரு என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடி ஆகியவற்றுக்கு கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்ததாக சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்தது.

பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் எண் 7 ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5ல் இருக்கும் ஷெங் சியோங் பேரங்காடியில் ஜூன் 9ஆம் தேதி காலை 7.50 முதல் 8.20 மணி வரை இருந்தார்.

எண் 19, சிராங்கூன் நார்த் அவென்யூ 5ல் இருக்கும் ஷெங் சியோங் பேரங்காடியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கொவிட்-19 நோயாளி ஒருவர் மாலை 5.15 முதல் 6.05 மணிவரை இருந்தார்.

கிருமித்தொற்று கண்ட மற்றொரு நபர் 447A ஜாலான் காயுவில் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் இம்மாதம் 15ஆம் தேதி மாலை 6.25 முதல் இரவு 8.55 வரை இருந்தார்.

சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 22) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 218 சம்பவங்களில் ஒன்று மட்டுமே உள்ளூர் சமூகத்தில் கண்டறியப்பட்டது.

வேலை அனுமதிச் சீட்டு கொண்ட 33 வயது இந்திய நாட்டவரான அவருக்கு கிருமித்தொற்று அறிகுறி ஏதுமில்லை. அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் செய்யும் முன்னெச்சரிக்கை பரிசோதனைகளில் மூன்றாமவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே கண்டறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் அவருக்குத் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 217 சம்பவங்கள் ஊழியர் தங்கும் விடுதிகளில் கண்டறியப்பட்டவி. சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 42,313 ஆக உளத்து.

உள்ளூர் சமூகத்தினரிடையே கிருமித்தொற்று  ஏற்படுவது கடந்த வாரத்தில்  சராசரியாக 4ஆக குறைந்துள்ளது; அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 8ஆக இருந்தது.

முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் சராசரி எண்ணிக்கை கடந்த இரு வாரங்களில் 2ஆக நீடிக்கிறது.

எண் 204 தாகூர் லேனில் இருக்கும் ஊழியர்தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுமத்தில் எட்டுப் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று குணமடந்து வீடு திரும்பிய 648 பேரையும் சேர்த்து இதுவரை 35,580 பேர் குணமடைந்துள்ளனர்.

200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் தீவிர சிகிசைப் பிரிவில் இருக்கிறார்.

சமூகப் பராமரிப்பு நிலையங்களில் 6,497 பேர் உள்ளனர். சிங்கப்பூரில் இதுவரை 26 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்தனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் வேறு காரணங்களால் 10 பேர் உயிரிழந்தனர்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon