மக்கள் செயல் கட்சியின் 8 புதிய வேட்பாளர்கள் அறிமுகம்

மக்கள் செயல் கட்சி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் எட்டு பேரை இன்று (ஜூன் 26) அக்கட்சி அறிமுகப்படுத்தியது. அவர்கள் புதிய வேட்பாளர்களில் கடைசி பிரிவினர்.
இவர்களில் முதல் நால்வரை கட்சியின் துணைத் தலைவர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறிமுகம் செய்து வைத்தார்.

கான் சியாவ் ஹுவாங்

சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் முன்னாள் மற்றும் சிங்கப்பூரின் முதலாவது பிரிகேடியர் ஜெனரலாக பதவி வகித்த 46 வயது திருவாட்டி கான், தற்போது தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் கீழ் இயங்கும் வேலைத் திறன் வேலைவாய்ப்புக் கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றுகிறார்.
ஆகாயப்படையில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள அவர் பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதியில் போட்டியிடும் மசேக அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேச்சல் ஓங் சின் யென்

ரோஹெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான 47 வயது குமாரி ஓங், வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் அடித்தளப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு தெலுக் பிளாங்கா குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக சேவையாற்றுகிறார்.

முகம்மது ஷராயல் முகம்மது தாஹா

‘சிங்கப்பூர் ஏரோ இன்ஜின் சர்வீசஸ்’ நிறுவனத்தின் உத்திபூர்வ, திட்ட நிர்வாகப் பிரிவின் துணைத் தலைவரான 39 வயது திரு முகம்மது ஷராயல், முன்பு பிரிட்டனில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியோது, பிரிட்டல், ஸ்காட்லாந்து, ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அதன் இன்ஜின் ஒன்றுசேர்ப்பு, சோதனை வசதிகளை மேற்பார்வையிட்டார்.

அலெக்ஸ் இயோ ஷெங் சாய்

நிரு அண்ட் கோ சட்ட நிறுவனத்தில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றும் 41 வயது திரு இயோ, எதிர்த்தரப்பின் வசம் உள்ள அல்ஜுனிட் குழுத் தொகுதிக்கு உட்பட்ட பாய லேபார் மசெக கிளைக்கு கபந்த மூன்று ஆண்டுகளாகத் தலைவராக இருந்து வருகிறார்.
பாய லேபாரில் உள்ள முதியவர்களுக்கம் வசதி குறைந்தவர்களுக்கும் உதவ தாம் விருப்பம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அடுத்து வரும் நான்கு வேட்பாளர்களை மக்கள் செயல் கட்சியின் இரண்டாம் உதவி தலைமைச் செயலாளர் சான் சுன் சிங் அறிமுகம் செய்து வைத்தார்.

மரியம் ஜஃபார்

போல்டன் ஆலோசனை நிறுவனத்தின் பங்காளியும் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான 43 வயது திருவாட்டி மரியம், உட்லண்ட்ஸ் சமூக மன்ற நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராக சேவையாற்றுகிறார்.
மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த திருவாட்டி மரியம், சிங்கப்பூரின் சிறந்த கல்வி முறை தம்மை ஸ்டான்ஃபர்ட் மற்றும் ஹாவட்ர் பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பளித்தது என்கிறார்.

ஷோன் ஹுவாங்

தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறுவன மேம்பாட்டுப் பிரிவின் இயக்குநரான 37 வயது திரு ஹுவாங், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையில் 19 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.
அவர் கடந்த 10 ஆண்டுகளாக தாமான் ஜூரோங் தொகுதியில், வசதி குறைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவுவது, முன்னாள் சிறைக் கைதிகள் புதுவாழ்வைத் தொடங்க உதவுவது போன்ற தொண்டூழியம் புரிந்து வருகிறார்.

சான் ஹுயி யூ

ஜிங்ஸ்லிங்க் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றும் 44 வயது திருவாட்டி சான், 2015 பொதுத் தேர்தலின்போது அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிட்ட மசெக அணிக்கு உதவினார். ஆனால் அப்போது அவரது இரு பிள்ளைகளுக்கு சிறிய வயதாக இருந்ததால் அவர் வேட்பாளராக நிறுத்தப்பட விரும்பவில்லை.
இப்போது அவரது இரு பிள்ளைகளும் முறையே தொடக்கப் பள்ளியிலும் உயர்நிலைப் பள்ளியிலும் படிப்பதால், அவர் அரசியலுக்கு வர இணக்கம் தெரிவித்துள்ளார்.

கெரி டான்

‘டாட்டர்ஸ் ஆஃப் டுமோரோ’ நன்கொடை அமைப்பின் தோற்றுவித்த நிர்வாக இயக்குநரான 38 வயது குமாரி டான், தமது அமைப்பின் மூலம் வசதி குறைந்த பெண்கள் சிங்கப்பூரில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டிக்காக்க உதவு
கிறார். அவர் நீ சூன் குழுத் தொகுதியில் தொண்டூழியம் புரிந்து வருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!