கோ பூன் வான் அரசியலிலிருந்து ஓய்வு

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது 20 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான 67 வயது திரு கோ, 2001ஆம் ஆண்டில் அரசியலுக்கு வந்தார்.

தமது பணிக் காலத்தில் அமைச்சுகளில் சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் இவர் பாராட்டப்பட்டார்.

பிரதமர் லீ சியன் லூங், மூத்த அரசியல்வாதியான திரு கோவை பாராட்டி எழுதிய கடிதத்தில்,“சிங்கப்பூர், சுகாதாரம், தேசிய வளர்ச்சி, போக்குவரத்து தொடர்பான சவால்களை சமாளிக்க உதவியவர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் அமைதியான, பெருமிதம்கொள்ளாத செயல்முறையால் நீங்கள் நிலையான, மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துள்ளீர்கள். இந்த அரசாங்கத்தால் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற சிங்கப்பூரர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளீர்கள்,” என்று பிரதமர் லீ அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2003ல் கடுமையான சார்ஸ் நோய் பரவல் ஏற்பட்டபோது, மூத்த சுகாதார அமைச்சராக ​​திரு கோ முன்னணியில் இருந்து செயல்பட்டார். இந்த ஆண்டு கொவிட்-19 தாக்கியபோது நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய செயல்முறைகளையும் அவர் அறிமுகம் செய்ததாக திரு லீ கூறினார்.

2011 பொதுத் தேர்தலுக்குப் பின் தேசிய வளர்ச்சி அமைச்சிற்கு திரு கோ தலைமை ஏற்றபோது கட்டுப்படியாகக்கூடிய வீட்டு உரிமை முக்கிய பிரச்சினையாக இருந்தது.

திரு கோ “வீவக கட்டுமானத் திட்டத்தை விரைவுபடுத்தினார்”, காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, பல்வேறு கொள்கைகளின் மூலம் இளம் சிங்கப்பூரர்கள் தங்களது முதல் சொந்த வீட்டை விரைவாகப் பெற முடிந்தது. எம்ஆர்டி கட்ட மைப்பை மேம்படுத்தியது திரு கோ மேற்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்றார் திரு லீ.

அவர் போக்குவரத்து அமைச்சராக 2015ல் நியமிக்கப்பட்டபோது, சிங்கப்பூரின் ரயில்கள், 5 நிமிடத்துக்கும் கூடுதலான தாமதங்களுக்கிடையே சராசரியாக 133,000 கிலோ மீட்டர் பயணம் செய்தன.

இதை ஒரு மில்லியனாக்கும் இலக்கை திரு கோ வைத்தார். அது சாத்தியமில்லாத இலக்கு என பலரும் நினைத்தனர். ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1.4 மில்லியன் கிலோ மீட்டரை ரயில்கள் எட்டின. இந்த வியத்தகு சாதனை என்பது பேரளவிலான கடின உழைப்பின் விளைவாகும், என்று பிரதமர் லீ சுட்டினார்.

தாம் 2004ல் பிரதமரானதில்இருந்து தமது அமைச்சரவையில் பணியாற்றி வரும் திரு கோ, தமக்கு மிகவும் நம்பகமான தளபதிகளில் ஒருவர் என்று குறிப்பிட்ட பிரதமர், திரு கோவின் தனிப்பட்ட ஆலோசனைக்கும் நட்புக்கும் நன்றி தெரிவித்தார்.

மக்கள் செயல் கட்சிக்கும் திரு கோ முக்கிய பங்காற்றியுள்ளார். 2011ல் ஏமாற்றமளித்த தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், கட்சியின் குறைபாடுகளை அடையாளம் கண்டு சரியான பாதைக்கு திருப்பினார். இது 2015ன் உறுதியான வெற்றிக்கு வழிவகுத்தது. இளம் அமைச்சர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் மூத்த ஆலோசகராகவும் திகழ்கிறார் என்றார் திரு லீ.

“42 ஆண்டுகாலப் பொதுச் சேவைக்குப் பிறகு, இது எனக்கு உணர்ச்சிமிகு வாரம். நன்றியுணர்வு நெஞ்சம் முழுக்க நிறைந்துள்ளது,” என்று தமது ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் திரு கோ பூன் வான்.

கொழும்புத் திட்ட உபகாரச் சம்பளம் பெற்ற திரு கோ, பட்டப்படிப்பை முடித்ததும் பொதுச் சேவையில் சேர்ந்தார். திரு கோ சோக் டோங் பிரதமராக இருந்தபோது அவரது முதன்மை தனிச் செயலாளராக இருந்துள்ள அவர், 2001ல் அரசியலுக்கு வருவதற்கு முன் வர்த்தக தொழில் அமைச்சில் நிரந்தரச் செயலாளராக இருந்தார்.

“இந்தப் பயணம் முழுவதும் எனது வலிமையான நங்கூரமாக என் மனைவி என்னுடன் நிற்கிறார். எங்கள் குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிகளையும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பெரிய நோக்கத்தையும் எனக்கு நினைவூட்டுகின்றனர். சிங்கப்பூரர்களின் எதிர்காலத் தலைமுறையினருக்கு மேலும் சிறந்த வாழ்க்கையை பாதுகாத்து தருவது இது,” என்றார் திரு கோ.

செவ்வாயன்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் திரு கோ செம்பவாங் குழுத்தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அவரது இடத்தில் புதியவரான குமாரி போ லீ சான் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அடுத்த கட்டமாக விடைபெற நேரம் வந்துவிட்டது. அடுத்த குழுவினர் சிங்கப்பூரை புதிய உயரத்திற்கு அழைத்துச் செல் வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் திரு கோ பூன் வான்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!