வாக்கு வித்தியாசம் 2%க்கும் குறைவு எனில் மறுஎண்ணிக்கை தானாக நடப்புக்கு வரும்

இந்தப் பொதுத் தேர்தலில், ஒரு தொகுதியில் வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் 2% அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் வாக்குகள் மறுமுறை எண்ணப்பட வேண்டும் என்ற விதி தானாகவே நடப்பிற்கு வந்துவிடும்.

இதற்கு முன்பு, வேட்பாளர்கள் அல்லது வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மறுஎண்ணிக்கை கோரி விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்று அறிவித்தபோது தேர்தல் துறை இந்த மாற்றத்தைக் குறிப்பிட்டது.

வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் 100 வாக்குச்சீட்டுகளை மட்டும் எடுத்து மாதிரி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். இறுதி முடிவுகள் வேறாக இருக்கலாம்.

தலைமைத் தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வ முடிவுகளை அறிவிக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை கையாலும் இரண்டாம் முறை வாக்கு எண்ணிக்கை இயந்திரங்களைக் கொண்டும் மேற்கொள்ளப்படும்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகளை எண்ணத் தொடங்குமுன், ஒவ்வோர் இயந்திரத்தின் துல்லியத்தன்மையையும் தேர்தல் அதிகாரிகள் சோதிப்பர். வேட்பாளர்களும் அவர்களுடைய வாக்கு எண்ணிக்கை முகவர்களும் அந்தச் சோதனையைக் காண முடியும்.

வாக்களிப்பு நாளில் வாக்காளர்களுக்காக செய்யப்பட்டுள்ள் ஏற்பாடுகள் குறித்த முழுமையான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஜூலை 2) அச்சுப் பிரதியை நாடுங்கள்!

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!