சிங்கப்பூரில் மேலும் 169 பேருக்கு கொவிட்-19; சமூகத்தில் 11 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஜூலை 3) நண்பகல் நிலவரப்படி புதிதாக 169 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,479 ஆகியுள்ளது.

இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 11 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; எண்மர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் மூவர் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய பின், இங்கு இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.

இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.

தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள புளோக் 111ல் உள்ள 58 வீடுகளைச் சேர்ந்த 160 பேரில் 85 பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது.

வெஸ்ட் மால், பாயா லேபர் ஸ்குவேர், ஐஎம்எம் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. டெக் வை அவென்யூ வில் இருக்கும் புளோக் 145ல் உள்ள ஃபு சான் கோப்பிக் கடைக்கு கிருமித்தொற்று கண்ட ஒருவர் சென்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேரில் எழுவர் சிங்கப்பூரர்கள்; ஒருவர் நிரந்தரவாசி, இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
எண் 7 கோம்பாஸ் கிரசென்ட், எண் 17 துவாஸ் வியூ குளோள் ஆகிய இடங்களில் உள்ள ஊழியர் தங்கு விடுதிகளில் இரண்டு புதிய கிருமித்தொற்று குழுமங்கள் அறிவிக்கப்பட்டன.

உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 9ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.

ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 4ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.

இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.

அனைத்துலக அளவில் கொவிட்-19ஆல் 10.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 523,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!