வாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிப்பு

சிங்கப்பூரில் வாக்களிப்பு நேரம் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

இல்லத் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வசதிகளைக்கொண்ட வாக்களிப்பு நிலையங்கள் தவிர மற்ற வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நேரத்தை நீட்டிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

“பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் கூட்ட நிலவரம் மேம்பட்டுள்ள போதும் சில நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. வாக்களிப்பு நேரம் நீட்டிக்கப்படுவதால் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்த இயலும்,” என்று தேர்தல் துறை தெரிவித்தது.

இல்லத் தனிமை உத்தரவைப் பெற்று வீட்டிலிருப்போர், கடும் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்போர், 37.5 டிகிரி செல்சியசுக்கு மேல் உடல் வெப்பநிலை அல்லது காய்ச்சல் கண்டிருப்போர் போன்றவர்கள் இரவு 7 முதல் 8 மணி வரை வாக்களிக்கலாம்.

வாக்களிப்பு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் வரிசையில் வாக்காளர்கள் இல்லாதபட்சத்தில் சிறப்பு நேரத்தில் வாக்களிப்பவர்கள் திட்டமிட்டபடி வாக்களிக்கலாம்.

நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கும் வாக்களிப்பு நிலையங்களில், சிறப்பு நேரத்தில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களை தேர்தல் அதிகாரிகள் அடையாளம் கண்டு அவர்களை வேறோர் இடத்தில் காத்திருக்கச் செய்வர். இதன் மூலம் மற்ற வாக்காளர்களுடன் அவர்களது தொடர்பு தவிர்க்கப்படும். வரிசையில் நிற்போர் வாக்களித்த பிறகு, சிறப்பு நேரத்தில் வாக்களிப்போருக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும்.

சிறப்பு நேரத்தில் வாக்களிக்க வேண்டியவர்கள், தங்களது வாக்களிப்பு நிலையத்தில் வரிசை நிலவரத்தை VoteQ.gowhere.gov.sg என்ற இணையப்பக்கத்தில் தெரிந்துகொண்டு பின்னர் வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்லுமாறு தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களில் நீண்ட வரிசை இருந்தால், சிறப்பு நேரத்தில் வாக்களிப்பவர்கள் அந்த நிலையங்களுக்கு இரவு 9 மணிக்கு வந்தால் போதும் என்று தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

ஒரு சில வாக்களிப்பு நிலையங்களில் உள்ள நீண்ட வரிசையை விரைவில் சரிப்படுத்தவும் அனைத்து வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அனைத்து வாக்காளர்களும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு நல்குமாறு தேர்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்!: https://bit.ly/2DkLO1R

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!