'ஆசியான் நாடுகளிலேயே ஆக அதிக கொவிட்-19 பரிசோதனை விகிதம் சிங்கப்பூரில்'

சிங்கப்பூரில் இம்மாதம் 13ஆம் தேதி நிலவரப்படி, 520,000 மாதிரிகளில் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுள்ளது.

இம்மாதம் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 143,000 ‘ஸ்வாப்’ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் உள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூரின் முக்கிய உத்திகளில் ஒன்று பரிசோதனை. அவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் கிருமித்தொற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டு, நெருங்கிய வட்டாரத்தினர் உடனடியாக தனிமைப்படுத்தப்படலாம்.

நாள் ஒன்றுக்கு 40,000 பரிசோதனைகள் வரை செய்யும் விதத்தில் பரிசோதனைத் திறனை அதிகரிக்க சிங்கப்பூர் திட்டமிடுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கடந்த மாதம் தெரிவித்தார்.

இந்த இலக்கை எட்டும் பொருட்டு நான்கு வட்டார பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாவதாக ஒரு நிலையமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய சில குழுக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூத்தோர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், 13 வயதுக்கு மேற்பட்ட மூச்சுப் பிரச்சினை உள்ளவர்கள், அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட குழுக்கள் அவை.

ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 172,506 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் சிங்கப்பூரில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்றைய (ஜூலை 16) நிலவரப்படி, வோர்ல்டோமீட்டர் இணையப் பக்கத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆசியான் நாடுகளிலேயே சிங்கப்பூரில்தான் இந்த விகிதம் அதிகமாக உள்ளது.

சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, புரூணையில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 79,510 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக அளவிலான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மலேசியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 26,617 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தோனீசியாவில் ஆகக் குறைவாக, ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 4,189 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஆசியான் நாடுகளிலேயே மியன்மாரில் ஆகக் குறைவாக, ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 1,770 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 135,463 பரிசோதனைகள் என்ற விகிதத்தில்தான் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் இந்த விகிதம் 183,531 ஆக இருக்கிறது.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 9,228 பரிசோதனைகள் என்ற விகிதத்தில் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!