அடுத்தவர் முதுகில் ஏறி இலவச சவாரி தந்திரம் கூடாது: பாட்டாளிக் கட்சிக்குப் பிரதமர் பதில்

மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கமே தொடர்ந்து பத­வி­யில் இருக்­கும் என்பதால் வாக்காளர்கள் அச்ச மின்றி எதிர்த்­ த­ரப்­புக்கு வாக்­க­ளிக்­க­லாம் என்று கடந்த தேர்­த­லில் பிர­சா­ரம் செய்­யப்­பட்­டது.

இதன் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தில் பிர­த­மர் லீ சியன் லூங்­கும் எதிர்த்­ த­ரப்­புத் தலை­வர் பிரித்­தம் சிங்­கும் விவா­தத்­தில் ஈடு­பட்­ட­னர்.

இப்­படி மற்றவர் முது­கில் ஏறி இல­வ­ச­மாக சவாரி செய்ய எந்­த­வொரு கட்சி முயன்­றா­லும் அத்­தகைய தந்­தி­ரம் முடி­வில் ஒரு நாட்­டின் அர­சியல் முறை­யைத் தோல்வி அடை­யச் செய்­து­வி­டும் என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

யார் அர­சாங்­கத்தை நடத்த வேண்­டும் என்­பதை முடிவு செய்­வதே தேர்­தல் என்று வலி­யு­றுத்­திக் கூறிய திரு லீ, மக்­கள் நேர்­மை­யாக, மனப்­பூர்­வ­மாக, உண்­மை­யிலேயே தங்­கள் விருப்­பத்­திற்­கேற்ப வாக்­க­ளித்­தால் மட்­டுமே ஒரு நாட்­டின் அர­சி­யல் முறை செயல்­பட முடி­யும் என்று குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­கள் சரி­யா­ன­வை­யாக இருக்க வேண்­டி­யது மிக முக்­கி­ய­மா­னது என்­பதை விளக்கி நாடா­ளு­மன்­றத்­தில் திரு லீ உரை­யாற்­றி­னார். அதைத் தொடர்ந்து இரு­வ­ருக்­கும் இடை­யில் கருத்து பரி­மாற்­றம் நடந்தது.

மக்­கள் செயல் கட்சி அர­சாங்கம் வேண்­டும் என்­றும் அதே­வேளை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த்­தரப்பு குர­லும் ஒலிக்க வேண்டும் என்­றும் விரும்­பும் வாக்காளர்கள் பல சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­களை பிரதிபலிப்ப­வர்­களாக இருக்­கி­றார்­கள் என்று எதிர்த்­த­ரப்­புத் தலை­வர் பிரித்­தம் சிங் குறிப்­பிட்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர், மன்­றத்­தில் தொகு­தி­யில்­லாத உறுப்­பி­னர்­கள் முறை மூலம் எதிர்த்­த­ரப்பு இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கிறது என்­றார். அத்தகைய உறுப்பினர்கள் மக்­க­ளுக்­கு மசெக பதில் சொல்ல வேண்­டிய கட்­டா­யத்தை ஏற்­ப­டுத்­து­வார்­கள் என்­றார்.

மசெக அர­சாங்­கம் தவறு செய்­கிறது என்று மக்­கள் கரு­தி­னால் அத்­த­கைய அர­சாங்­கத்­துக்கு வாக்­க­ளிக்­கக் கூடாது. ஆனால் சிங்­கப்­பூ­ரர்­கள் தந்­தி­ர­மான ரீதி­யில் வாக்­க­ளித்­தார்­க­ளே­யா­னால் ஒரு நாள் அவர்­கள் விரும்­பாத ஒரு முடிவு ஏற்­பட்­டு­வி­டும் என்று பிர­த­மர் எச்­ச­ரித்­தார்.

பிர­த­ம­ருக்­கும் எதிர்த்­த­ரப்­புத் தலை­வ­ருக்­கும் இடை­யில் சிங்­கப்­பூ­ரின் தேசிய சேமிப்பு தொடர்­பிலும் கருத்து பரி­மாற்­றம் இடம்­பெற்­றது.

அந்­தச் சேமிப்­பில் இருக்­கும் அசல் தொகை­யைத் தொடா­மல் அத­னு­டைய வளர்ச்சி விகி­தத்தை எந்த அள­வுக்கு மெதுவடையச்செய்ய முடி­யும் என்­பதை பரி­சோ­திப்­பதே பாட்­டா­ளிக் கட்­சி­யின் எண்­ணம் என்று திரு பிரித்தம் சிங் கூறினார்.

புதிய நாடா­ளு­மன்­றத்­தைத் தொடங்­கி­வைத்து அதி­பர் ஆற்­றிய உரை மீதான விவாதத்­தின்போது இந்­தப் பிரச்­சி­னையை எழுப்­பிய பிர­த­மர், பாட்­டா­ளிக் கட்சி சிங்­கப்­பூ­ரின் சேமிப்­பின் அளவு பற்றி கேள்வி எழுப்பி இருந்­தது எப்­படி என்­பதைக் குறிப்­பிட்டு அதை குறை கூறி­னார்.

வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தை­யும் வரித் திட்­டங்­க­ளை­யும் ஆத­ரிப்­ப­தற்கு முன் சேமிப்­பில் இருக்­கும் தொகை எவ்­வ­ளவு என்­பதை தெரி­யப்­ப­டுத்­துங்­கள் என்று பாட்­டா­ளிக் கட்சி கேட்­டி­ருந்­தது.

அதா­வது ஏற்­கெ­னவே எனக்கு வங்­கி­யில் பணம் இருக்­கிறது. அதில் எந்த அள­வுக்கு நான் தொட முடி­யும் என்­று­தான் அந்­தக் கட்சி கேட்­கிறது.

இந்­தப் போக்கு அடிப்­படை ரீதி­யில் தவ­றான அணு­கு­முறை என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு சிங், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் நல்­வாழ்வை இன்­னும் சிறந்த முறை­யில் பரி­சீ­லிப்­ப­தற்­கான மாற்று ஏற்­பா­டாக அந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளைப் பாட்­டா­ளிக் கட்சி கேட்ப­தாக குறிப்­பிட்­டார்.

இதற்­குப் பதி­ல­ளித்த திரு லீ, காப்பு நிதியைச் சிர­ம­மான காலத்­தில் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான நிதி­யா­கக் கரு­த­ வேண்­டும் என்ற அடிப்­படை கோட்­பாட்­டின் பேரி­லேயே தான் வாதி­டு­வ­தா­க தான் அளித்த விளக்கத்தில் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!