' 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படலாம் '

' 6 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படலாம் '

1 mins read
2016a20c-006b-4649-a09f-5bfd5ebe3689
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை முதல் காலாண்டில் இருந்ததைவிட இரட்டிப்பாகி 6,700 பேர் வேலை இழக்க நேரிட்டது. இது 2003 சார்ஸ் நெருக்கடியின்போது ஏற்பட்ட வேலையிழப்பான 5,510ஐ காட்டிலும் அதிகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் வலுவிழந்து வரும் வேலை வாய்ப்புச் சந்தையை அரசாங்கம் ஓரளவுக்குத்தான் பாதுகாத்து வைத்திருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

கொவிட்-19 நெருக்கடியால் ஏற்படும் விளைவுகளை முழுமையாக உணரும் வகையில் வரும் ஆறு மாதக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்துரைத்த மனிதவள அமைச்சு, தொடர்ந்து இருந்துவரும் இந்த நிலைமைத்தன்மையற்ற போக்கை சிங்கப்பூர் மட்டும் எதிர்கொள்ளவில்லை, உலக நாடுகளே எதிர்கொண்டு வருகின்றன. இந்த நெருக்கடியின் விளைவுகளை முதல் காலாண்டில் நம்மால் உணர முடியவில்லை. இப்போது வேலைச்சந்தையில் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளதை நம்மால் கண்கூடாகக் காண முடிகிறது என்று கூறியது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் வேலையிழந்தோர் எண்ணிக்கை முதல் காலாண்டில் இருந்ததைவிட இரட்டிப்பாகி 6,700 பேர் வேலை இழக்க நேரிட்டது. இது 2003 சார்ஸ் நெருக்கடியின்போது ஏற்பட்ட வேலையிழப்பான 5,510ஐ காட்டிலும் அதிகம்.

குறிப்புச் சொற்கள்