'இந்தியாவில் இருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு கிளம்புவதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை அவசியம்'

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளல்லாத, இந்தியாவிலிருந்து வரும் பயணிகள், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இம்மாதம் 17ஆம் தேதி முதல், சிங்கப்பூருக்கு கிளம்புவதற்கு 72 மணி நேரத்துக்குள்ளாக மேற்கொள்ளப்பட்ட, ‘பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன்’ சோதனை முடிவுகளில் கொவிட்-19 இல்லை என்ற சான்றிதழை அவர்கள் சிங்கப்பூரில் காட்ட வேண்டும்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்த பயணிகளுக்கு இந்த புதிய, கடுமையான எல்லைக் கட்டுப்பாடு பொருந்தும். 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் வளாகங்களில் தங்குவது, அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கொவிட்-19 பரிசோதனை போன்ற ஏற்கெனவே நடப்பில் இருக்கும் நடைமுறைகளுடன் இந்தப் புதிய கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் கொவிட்-19 சம்பவங்கள் பெருகி வருவதாலும், இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களிடையே கொவிட்-19 எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்த ஒரு வயது குழந்தைக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தியா இன்று 89,706 புதிய கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்தது; அங்கு கொவிட்-19 மொத்த எண்ணிக்கை சுமார் 4.3 மில்லியனை எட்டியுள்ளது. உலக அளவில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் கொவிட்-19 எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருவோரிடமிருந்து உள்ளூர் சமூகத்தில் கிருமிப் பரவல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், தேவையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து சரிசெய்யப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு வந்ததும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தல் வளாகங்களில் தங்குவது, கொவிட்-19 பரிசோதனை போன்றவற்றுக்கான செலவுகளுக்கும் பயணிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!