பெரிய அளவில் நடக்கும் நிகழ்வுகளில் துரித கொவிட்-19 பரிசோதனை

அதி­க­மா­னோர் கலந்­து ­கொள்­ளும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பங்கேற்பாளர்கள் 'ஆன்டிஜென் ரேப்பிட் டெஸ்ட்’ எனப்­படும் கொவிட்-19க்கான துரித பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

முப்­பது நிமி­டங்­க­ளுக்­குள் வெளி­வ­ரும் சோதனை முடி­வு­களில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்­லை­யென உறு­தி­செய்­யப்­பட்­டால்­தான் அவர்­கள் அந்த நிகழ்ச்­சிக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள். சிங்­கப்­பூ­ரில் பாது­காப்­பாக அதிக நட­வ­டிக்­கை­களைச் செயல்­ப­டுத்த உத­வும் புதிய முன்­னோட்­டத் திட்­ட­மாக இது அறி­விக்­கப்­பட்­டது.

இத்­து­ரித பரி­சோ­த­னை­கள், நிகழ்ச்சி நடக்­கும் இடத்­திலோ வேறு இடத்­தில் அமைந்­தி­ருக்­கும் பரி­சோ­தனை வளா­கத்­திலோ நடத்­தப்­ப­ட­லாம் என்று நேற்று சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டது.

வேறு இடத்­தில் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டால் பரி­சோ­தனை முடி­வில் தங்­க­ளுக்கு கொவிட்-19 இல்­லா­த­தைக் குறிக்­கும் சான்­றி­த­ழைப் பங்­கேற்­பா­ளர்­கள் நிகழ்ச்சி நடக்­கும் இடத்­திற்கு நுழை­யும் முன்பு காட்­ட­வேண்­டும். அந்­தச் சான்­றி­தழ் 24 மணி நேரத்­திற்கு மட்­டுமே செல்­லு­ப­டி­யா­கும். நிகழ்ச்சி முடி­யும்­வ­ரை­யில் அந்த 24 மணி நேர காலக்­கெடு உள்­ள­டங்­க­வேண்­டும்.

பல நாட்­கள் நீடிக்­கும் நிகழ்ச்­சிக்­குச் செல்­வோர் தினந்­தோ­றும் பரி­சோ­த­னையை மேற்­கொள்­ள­வேண்­டும். 24 மணி நேரத்­தில் பல நிகழ்ச்­சி­க­ளுக்­குச் செல்­வோர் ஒரு­முறை பரி­சோ­த­னையை மேற்­கொண்­டால் போதும்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு பின்­னர் குண­ம­டைந்­த­வர்­கள் 180 நாட்­க­ளைத் தாண்­டி­விட்ட பட்­சத்­தில் அவர்­கள் உடல்­நலத்­து­டன் இருந்­தால் அவர்­கள் இந்த விரை­வுப் பரி­சோ­த­னையை மேற்­கொள்ள தேவை­யில்லை.

மருத்­து­வ­ரீ­தி­யாக கிடைத்­துள்ள சான்­று­க­ளின்­படி அவர்­க­ளுக்கு வேறொரு தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான எதிர்ப்பு சக்தி உட­லில் உண்டு என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

முன்­னோட்­டத் திட்­டத்­தின்­கீழ் இந்த ‘அன்­டி­ஜன் ரேபிட் டெஸ்ட்’ பரி­சோ­த­னை­கள் பங்­கேற்­பா­ளர்­களுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­படும்.

இந்த விரை­வுப் பரி­சோ­த­னை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­தால் தங்­களைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு இல­வ­ச­மாக வழங்­கப்­படும் ‘போலி­மெ­ரேஸ் செயின் ரியேக்­‌‌ஷன்’ எனும் பிசி­ஆர் கொவிட்-19 கிரு­மித்­தொற்றை உறு­தி­செய்­யும் பரி­சோ­த­னைக்­கும் செல்­ல­வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று இல்லை என்று முடி­வு­கள் வரும்­வ­ரை­யில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்ட இடத்­தை­விட்டு வெளி­யே­றக்­கூ­டாது.

இவ்­வாண்டு டிசம்­பர் வரை­யில் பெரிய அள­வி­லான நிகழ்ச்­சி­களை அர­சாங்­கம் சுட்­டிக்­காட்­டும். வர்த்­த­கம் சார்ந்த நிகழ்ச்­சி­கள், திரு­மண வர­வேற்­பு­கள், நேரடி நிகழ்ச்­சி­கள், விளை­யாட்டு நிகழ்­வு­கள் முத­லி­யவை அவற்­றில் அடங்­கும்.

நிகழ்ச்­சி­க­ளுக்கு முன்­னர் நடத்­தப்­படும் இந்த பரி­சோ­த­னை­க­ளின் முன்­னோட்­டத் திட்­டம் மூலம் இந்­தச் செயல்­பாட்டு வழி­மு­றை­களை சுகா­தார அமைச்சு ஆராய உத­வும். அதன்­மூ­லம் சிறப்­பான திட்­டத்­தைக் கண்­ட­றிந்து அதி­க­ள­வில் செயல்­படுத்­தி­னால் விரை­வில் கூடு­த­லான மக்­கள் கலந்­து­கொள்­ளும் நிகழ்ச்­சி­க­ளைத் தொடங்­க­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

தற்­போது தேசிய அள­வி­லான ‘ஸ்வாப்’ பரி­சோ­த­னை­கள் தலை­சி­றந்த முறை என்று கூறப்­படும் பிசி­ஆர் பரி­சோ­த­னை­க­ளைக்­கொண்டு நடத்­தப்­ப­டு­கிறது. மிக­வும் துல்­லி­ய­மான முடி­வு­களை இந்­தச் சோத­னை­யின் மூலம் பெற­லாம்.

ஆனால் கிட்­டத்­தட்ட இரண்டு நாட்­கள் கழித்தே இந்­தச் சோத­னை­யின் முடி­வு­கள் தெரி­ய­வ­ரும். விலை­யு­யர்ந்த பரி­சோ­த­னை­யா­க­வும் பயிற்சி பெற்­ற­வர்­களும் நிபு­ணத்­து­வம் வாய்ந்த தள­வா­டங்­களும் இதற்­குத் தேவை.

எனி­னும் ‘அன்­டி­ஜன் ரேபிட் டெஸ்ட்’ விரை­வுப் பரி­சோ­த­னை­களுக்­குக் குறை­வா­கவே செல­வா­கும். மேலும் முடி­வு­கள் சீக்­கி­ரம் கிடைத்­து­வி­டும். முடி­வு­க­ளின் துல்­லி­யம் ஏறக்­கு­றைய சரி­யாக இருக்­கும் என்­றும் அமைச்சு கூறி­யது.

இர­வு­நேர வர்த்­த­கங்­க­ளுக்கு உதவ முன்­னோட்­டத் திட்­டங்­கள்

இர­வு­நேர வர்த்­த­கங்­கள் மீண்­டும் பாது­காப்­பு­டன் இயங்க உதவ கட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லான முன்­னோட்­டத் திட்­டங்­களை அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது.

கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ராகச் செயல்­படும் அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் நேற்று இது குறித்து அறி­விக்­கப்­பட்­டது.

இந்த முன்­னோட்­டத் திட்­டங்­கள் எவ்­வாறு அமல்­ப­டுத்­தப்­ப­ட­லாம் என்று இர­வு­நேர வர்த்­த­கத் துறை­யி­ன­ரு­டன் கலந்­தா­லோ­சிக்க இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

2021ல் கொவிட்-19 தடுப்­பூசி மருந்­துக்கு வாய்ப்­புண்டு

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக மக்­கள் தொகை­யில் வெவ்­வேறு பிரி­வு­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தற்­கான திட்­டங்­களை சிங்­கப்­பூர் அடுத்த ஆண்டு முதல் மேற்­கொள்ள வாய்ப்­புள்­ளது.

கொரோனா கிரு­மி­யால் அதி­கம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள், நோய்த்­தொற்று ஏற்­ப­டு­வ­தற்­கான அதிக ஆபத்து உள்­ள­வர்­கள், சுகா­தார வல்­லு­நர்­கள், முன்­னிலை ஊழி­யர்­கள் ஆகி­யோர் தடுப்­பூ­சிக்கு முன்­னு­ரிமை பெற­லாம் என்று சுகா­தார அமைச்­சின் மருத்­து­வச் சேவை இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!