‘சிங்கப்பூரில் வேலைச் சந்தை மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும்’

சிங்கப்பூர் ஊழியர் சந்தையின் மீட்சி மெதுவாகவும் ஏற்ற இறக்கமாகவும் இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் கூறியுள்ளது.

அத்துடன், வேலையின்மை விகிதம் கொள்ளைநோய்ப் பரவலுக்கு முன்பிருந்த, குறைந்த நிலைக்குத் திரும்ப கூடுதல் காலம் எடுக்கலாம் என்றும் ஆணையம் இன்று (அக்டோபர் 28) வெளியிட்ட பொருளியல் அறிக்கையில் குறிப்பிட்டது.

அந்த அறிக்கையில், இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் வேலையின்மை விகிதம் உச்சத்தை எட்டி, பின்னர் படிப்படியாக இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது ஊழியர்களின் சம்பளத்தில் இவ்வாண்டு முழுமைக்கும் அநேகமாக அடுத்த ஆண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உணவு, பானத்துறை, துப்புரவு, பாதுகாப்புத் துறைகளில் வேலைவாய்ப்பு அண்மைய காலத்தில் பிரகாசமாக இருந்தாலும், மற்ற துறைகளின் வேலையின்மை விகிதம் படிப்படியாகத்தான் குறையும் என்று அது கூறியது.

இரண்டாம் பாதியாண்டில் இருந்து கட்டுமானத் துறை மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கியுள்ளதால், அந்தத் துறையில் ஊழியர் சேர்ப்பு அதிகரிக்கலாம்.

பல துறைகளின் செயல்பாடுகள் எதிர்பார்த்ததைவிட பலவீனமாக இருப்பதால், நிச்சயமற்றதாக விளங்கும் பொருளியல் கணிப்பு, ஒட்டுமொத்த ஊழியர் சந்தையின் வளப்பத்தை நிறுத்திவைக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!