3வது தொகுப்பு உத்தேச சட்ட திருத்தங்கள் அவசர நிறைவேற்றம்; சிறு நிறுவனங்களுக்கு உதவ புதிய ஏற்பாடு

3வது தொகுப்பு உத்தேச சட்ட திருத்தங்கள் அவசர நிறைவேற்றம்; சிறு நிறுவனங்களுக்கு உதவ புதிய ஏற்பாடு

3 mins read
634d8336-70a6-4c6c-a765-6fd964c4a5e7
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 (தற்­கா­லிக நடவடிகைகள்) சட்டத்திற்கான 3வது தொகுப்பு உத்­தேசத் திருத்­தங்­களை நேற்று நாடாளு­மன்­றம் அவ­ச­ர­மாக நிறை­வேற்­றி­யது.

அந்­தத் திருத்­தங்­கள் சிறு, நுண் நிறு­வ­னங்­கள் தெண்­டத் தொகை­யில்­லா­மல் குறிப்­பிட்ட வர்த்­தக ஒப்­பந்­தங்­களை முடித்­துக்­கொள்ள வகை­செய்­கின்­றன.

நாடா­ளு­மன்­றத்­தில் அவை நேற்று இரண்­டா­வது வாசிப்­புக்கு வந்­த­போது இரண்­டா­வது சட்ட அமைச்­சர் எட்­வின் டோங், இத்­த­கைய ஓர் ஏற்பாடு அத்­த­கைய நிறு­வ­னங்­க­ளுக்கு உயிர்­கொடுக்­கும் ஒன்­றாக இருக்­கும் என்று விளக்­கி­னார்.

இர­வு­நேர கேளிக்கை விடுதி ஒன்றை நடத்­து­ம் ஒரு­வர், மார்ச் முதல் செயல்­பட முடி­ய­வில்லை என்­றா­லும் அடுத்த ஆண்டு மார்ச் வரை அவ­ரது தொழில் குத்­த­கைக் காலம் நீடிக்கும் என்­ப­தால் அது வரைப்­பட்ட தொகையை அவர் செலுத்­தி­யாக வேண்­டும். இத­னால் அவ­ருக்கு கடன் அதி­க­ரிக்­கும்.

நடு­வில் உடன்­பாட்டை முடித்­துக்­கொள்ள வேண்­டு­மா­னால் சில நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் ஏறக்­கு­றைய $250,000 செலுத்த வேண்­டி இருக்­கும்.

இத்­த­கைய நிறு­வ­னங்­கள் புதிய நிபந்­த­னை­க­ளின் கீழ் இணக்­கம் காண முடி­யாத பட்­சத்­தில் அவற் றுக்கு இந்­தப் புதிய ஏற்­பாடு பலன் தரும் என்று அமைச்­சர் கூறினார்.

ஒரு குறிப்­பிட்ட வரு­வாய் வரம்பைக் கொண்ட சிறு, மிகச்­சிறு நிறு­வ­னங்­களை இந்­தப் புதிய ஏற்­பாடு உள்­ள­டக்­கும். அதோடு அந்த நிறு­வ­னங்­க­ளின் வரு­வாய் கணி­ச­மா­கக் குறைந்­தி­ருக்க வேண்­டும்.

துணைச் சட்­டம் ஒன்­றில் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் சட்­டப்­படி செய்து கொண்­டி­ருக்­கும் உடன்­பா­டு­களை மட்­டும் இந்­தப் புதிய ஏற்­பாடு உள்­ள­டக்­கும். அத்­த­கைய ஒப்­பந்­தங்­கள் மார்ச் 25க்கு முன்பு செய்து கொண்­டி­ருக்க வேண்­டும். நவம்­பர் 2க்கு பிறகு முடி­வ­டையவேண்­டும்.

ஒப்­பந்­தம் செய்­து­கொண்­டுள்ள தரப்­பு­களில் ஒரு தரப்பு சிங்­கப்­பூரில் தொழில் நடத்த வேண்­டும். அத்­த­கைய ஒப்­பந்­தங்­கள் வர்த்தகச் சொத்­து­கள் சம்­பந்­தப்­பட்ட குத்­த­கை­க­ளாக அல்­லது உரி­மங்­க­ளாக இருக்­க­லாம்;

பொருள் சேவை விற்­பனை மற்­றும் கொள்­மு­தல்; வர்த்­தக சாத­னங்­கள் மற்றும் வாக­னங்­க­ளுக்­கான வாடகை உடன்­பா­டு­க­ளாக, வர்த்­தக சாத­னங்­கள் மற்­றும் வாக­னங்­க­ளுக்­கான தவ­ணைக் கொள்­மு­தல் அல்­லது நிபந்­த­னை­க­ளு­டன்­கூ­டிய விற்­பனை உடன்­பா­டு­களாக அவை இருக்­க­லாம்.

இந்­தப் புதிய ஏற்­பாட்­டில் இருந்து சில குறிப்­பிட்ட உடன்­பாடு­கள் விலக்­கப்­பட்டு இருக்­கின்­றன. பய­னீட்­டா­ளர், வேலை நிய­மனம், காப்­பு­றுதி உடன்­பா­டு­கள் இவற்­றில் அடங்­கும்.

திருத்­தச் சட்­டம் நடப்­புக்கு வந்­த­தும் நிறு­வ­னங்­கள் ஆறு­வார காலங்­க­ளுக்­குள் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட வேண்­டும்.

புதிய நிபந்­த­னை­க­ளின் பேரில் இணக்­கம் இல்லை என்­றால் ஒப்­பந்­தங்­க­ளைத் தெண்­டத் தொகை இல்­லா­மல் முடித்­துக்­கொள்ள முடி­யும். இருந்­தா­லும் அந்த ஒப்­பந்­தங்­களில் சம்­பந்­தப்­பட்ட முந்­தைய கடன் பொறுப்­பு­களை இன்­ன­மும் நிறை­வேற்ற வேண்டி இருக்­கும்.

புதிய ஏற்­பாட்­டிற்கு நிறு­வ­னங்­கள் தகுதி பெறு­வது தொடர்­பில் அல்­லது ஒப்­பந்­தத்தை முடித்­துக்­கொள்­வ­தன் பேரில் கொடுக்கப் படவேண்டிய தொகை தொடர்­பில் யாருக்­கா­வது இணக்­கம் இல்லை என்­றால் அவர்­கள் சட்ட அமைச்சு நிய­மிக்­கும் மதிப்­பீட்­டா­ளர் உத­வி­யு­டன் இறுதி முடிவை எட்­ட­லாம்.

கொவிட்-19 (தற்­கா­லிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டம் ஏப்­ரல் முதல் முத­லா­வ­தாக நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

நிறு­வ­னங்­களும் தனிப்­பட்­ட­வர்­களும் சில குறிப்­பிட்ட ஒப்­பந்­தக் கடப்­பா­டு­களை தெண்­டத் தொகை செலுத்த வேண்­டிய தேவை இல்­லா­மல் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க அச்சட்­டம் வகை செய்­தது.

ஆனால் இத்­த­கைய நிவா­ரண காலத்­தை­யும் நட­வ­டிக்­கை­க­ளை­யும் கால­வ­ரம்­பின்றி நீட்­டிக்க முடி­யாது என்­பதால் நிறு­வ­னங்­கள் குறிப்­பாக சிறிய நிறு­வ­னங்­கள் மீட்சி அடைய வேண்­டும் என்­பதில் அர­சாங்­கம் ஒரு­மித்த கவ­னம் செலுத்­து­கிறது என்­றார் அவர்.

குறிப்­பிட்ட சிறிய நில உரி­மை­யா­ளர்­கள் கூடு­தல் இழப்­பீட்டை பெறும் வகை­யில் விதி­வி­லக்கு இருக்­கும்.

வர்த்­தக சாத­னங்­களை, வாக­னங்­களை வாட­கைக்கு எடுப்பவர்­கள், வாட­கைக்குக் கொடுப்­ப­வர்­கள் உடன்­பாட்டை முடித்­துக்­கொள்­வதற்­குப் பதி­லாக தங்­க­ளு­டைய கடனை ஆண்­டுக்கு 5% வட்­டி­யுடன் அடைக்க 18 மாதம் வரை கால­ அ­வ­கா­சம் இருக்­கும்.

இந்த விருப்ப உரிமை சில நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவ­சி­ய­மானது என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்