தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோருக்கு புதிய நிபந்தனைகள்

கொவிட்-19 தொற்று அபா­யம் அதி­க­முள்ள நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரு­வோர், அடுத்த வாரம் முதல் புதிய நிபந்­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்.

அவர்­கள் தங்­க­ளின் பய­ணத்­திற்கு முன்­ன­தாக குறைந்­தது 72 மணி நேரத்துக்குள்ளாக ‘பிசி­ஆர்’ எனப்படும் பல்படியத் தொடர்வினை பரி­சோ­த­னை­யைச் செய்­தி­ருக்க வேண்­டும்.

பின்­னர் சிங்­கப்­பூர் வந்­த­டைந்­த­தும் 14 நாட்­க­ளுக்கு வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ர­வை­யும் அவர்­கள் நிறை­வேற்ற வேண்­டும் என்று சுகா­தார அமைச்சு நேற்று (நவம்பர் 10) தெரி­வித்­தது.

உத்­த­ர­வுக் காலம் முடி­வ­டைந்­த­தும் அவர்­கள் மீண்­டும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர். இப்­பு­திய கட்­டுப்­பாடு நவம்­பர் 17, இரவு 11.59 மணி முதல் நடப்­புக்கு வரு­கிறது.

இருப்­பி­னும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கும் இப்­பு­திய நிபந்­தனை பொருந்­தாது. அத்­து­டன் கிருமி அபா­யம் குறை­வாக உள்ள நாடு­க­ளான புரூணை, நியூ­சி­லாந்து, வியட்­னாம், ஆஸ்­தி­ரே­லியா, சீனா­ போன்­ற­வற்­றி­லி­ருந்து வருகை அளிப்­போ­ருக்­கும் புதிய கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

“கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த, வெவ்­வேறு நாடு­களும் வட்­டா­ரங்­களும் பலன் தரக்கூடிய செயல்­முறை­களை நடப்­பில் கொண்டு வரு­வ­தில் வெவ்­வேறு கட்­டங்­களில் உள்­ளன.

“இதை நாங்­கள் அறி­வோம். அத­னால் சிங்­கப்­பூ­ரின் எல்­லைத் திறப்­புக் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு, கிருமி அபா­யம் அடிப்­படை­யி­லான அணு­கு­மு­றையை நாங்­கள் கையா­ள­வி­ருக்­கி­றோம். வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­வோ­ரி­டையே கிரு­மித்­தொற்று உறு­தி­யா­வ­தையும் அது சமூ­கத் தொற்­றுக்கு வழி வகுப்­ப­தையும் பொறுத்து இந்த அணு­கு­முறை அமைந்­தி­டும்,” என்று சுகா­தார அமைச்சு நேற்று அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

கிருமி அபா­யம் குறை­வாக உள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரு­வோர், இரண்­டில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம். ஒன்று, சிங்­கப்­பூர் வந்­த­தும் அவர்­கள் ‘பிசி­ஆர்’ பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்ள வேண்­டும். அல்­லது, ஏழு நாட்­க­ளுக்கு வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ரவை அவர்­கள் நிறை­வேற்றி அதன் இறு­தி­யில் பரி­சோதனை செய்­து­கொள்ள வேண்­டும்.

கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள வரு­கை­யா­ளர்­கள், 14 நாட்­க­ளுக்கு வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ர­வுக் காலத்தை ஒதுக்­கப்­பட்ட வளா­கங்­களில் தங்கி நிறை­வேற்ற வேண்­டும். அது வீடா­க­வும் இருக்­க­லாம். ஆனால் அங்கு வேறு எவரும் வசிக்க முடி­யாது.

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ரான கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், மேலும் ஒரு நிபந்­தனை குறித்­தும் நேற்று பேசி­னார்.

சிங்­கப்­பூர் வரு­வோர், வீட்­டில் இருக்­கும் உத்­த­ர­வுக்குக் கட்­டுப்­பட்டு நடப்­பதைக் கண்­கா­ணிக்க மின்­னி­யல் கருவி­களை அணிந்­தி­ருக்க வேண்­டும் என்­றார்.

சிங்­கப்­பூர் அதன் மூன்­றாம் கட்­டத் தளர்­வு­நி­லையை நோக்­கிச் செல்ல, அபா­யம் அளிக்­கக்­கூ­டிய இரு பெரும் அம்­சங்­கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

ஒன்று, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­வோ­ரால் கிருமி அபா­யம், மற்­றொன்று உள்­ளூர் சமூ­கத் தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கும் அபா­யம்.

எல்­லைத் திறப்பு குறித்­தும் திரு வோங் கருத்­து­ரைத்­தார்.

“சிங்­கப்­பூர் சிறிய நாடு. உல­கத்­து­டன் தொடர்­பில் இருக்­கும் தேவை நமக்கு இருக்கவே செய்கிறது. பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு மட்­டு­மல்ல, சமூக மற்­றும் சமு­தா­யத் தேவை­க­ளுக்­கும் அந்த இணைப்பு தேவைப்­ப­டு­கிறது. குடும்­பங்­களும் ஒன்­று­சேர நாம் அனு­ம­திக்க வேண்­டும். நம் அன்­பிற்­கு­ரி­ய­வர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளும் வெளி­நாட்டு இல்­லப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் நாம் உதவ வேண்­டும்,” என்­றார் அவர்.

வீட்­டில் இருப்­ப­தற்­கான உத்­த­ரவு காலத்­தின்­போ­தும் சமூ­கத்­தி­லி­ருந்து அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதும், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­வோரி­டையே கொவிட்-19 கிரு­மித்­தொற்று பதி­வா­ன­தா­க­வும் அமைச்­சர் வோங் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய பய­ணி­கள், சிங்­கப்­பூர் வரு­வ­தற்கு முன்­பா­கவே கொவிட்-19 பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்­வது கூடு­தலான ஒரு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கையே என்­றார் திரு வோங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!