பிரதமர் லீ: ஊழியர்களை கைவிடாதீர்

கொவிட்-19 கார­ண­மாக நிறுவனங்கள் புதிய நிலவரங்களைத் தழுவிக்கொள்ளும் போதிலும் ஊழி­யர்­களைக் கைவிட்டுவிடாமல் நல்ல முறை­யில் கவ­னித்து வர­வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது என்று பிர­த­மர் லீ சியன் லூங் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

ஊழி­யர்­கள் ஒரு நிறு­வ­னத்­தின் முக்­கி­ய­மான வளம் என்று அவர் வர்­ணித்­தார்.

“இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தில் ஊழி­யர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்­ளுங்­கள்.

“ஊழி­யர்­க­ளைக் குறைத்­தால் செலவு குறை­யும் என்று திடீர் முடி­வு­களை எடுத்து அவர்­களைக் கைவிட்­டு­வி­டா­தீர்­கள். ஊழியர்­களை நல்லவித­மாக கவ­னித்­துக்கொள்­ளுங்­கள். முடிந்­தால் அவர்­களை வேலை­யிலேயே தக்­க­வைத்­துக் கொள்­ளுங்­கள். வேறு வேலை­களில் அமர்த்­துங்­கள்.

“இப்­படிச் செய்­தால் அவர்­கள் உங்களுக்கும் உங்­கள் நிறு­வ­னத்­திற்­கும் நன்­றி­க்கடன் பட்­ட­வர்­க­ளாக நடந்­து­கொண்டு கட­னைத் தீர்ப்­பார்­கள் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

“நிறு­வ­னங்­கள் இப்­ப­டிப்­பட்ட அணு­கு­முறையைக் கையாண்டு வரு­வ­தன் மூலம் பிணைப்பை நாம் வலுப்­ப­டுத்த முடி­யும். ஒரு நாள் மறு­ப­டி­யும் நாம் செழிப்­ப­டை­வோம்,” என்று திரு லீ தெரி­வித்­தார்.

இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தில் நிறு­வனங்­கள் வருங்­கா­லத்­தையே பார்க்க வேண்­டுமே தவிர பின்­னால் திரும்பிப் பார்க்­கக்­கூடாது என்­றார் அவர்.

ஆசி­ய பசி­பிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு அமைப்­பு­டன் (ஏபெக்) தொடர்­பு­டைய மெய்­நி­கர் நிகழ்ச்சி ஒன்­றில் எதிர்­கால உலகப் பொரு­ளி­யல் வளர்ச்சி பற்­றிய விவா­திப்பு ஒன்­றில் திரு லீ உரை­யாற்­றி­னார். அப்­போது அவர் நிறு­வ­னங்­களை இவ்வாறு வலி­யு­றுத்­தி­னார்.

கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து உல­கம் மீண்டு வர பல ஆண்­டு­கள் ஆகும். அப்­போ­தும் கூட புதிய வழ­மை­களில் சில மாற்­றங்­களும் இடம்­பெ­றும் என்­றார் அவர்.

அடுத்த ஆண்டு தொடக்­கத்­தில் கொரோனா தடுப்­பூசி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டாலும் அநே­க­மாக 2022ல்தான் உலக மக்­களில் பலரை­யும் அது சென்­ற­டை­யும். கொவிட்-19 பர­வ­லும் மெது­வ­டை­யும் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

அடுத்த ஆண்டு அனைத்­து­லக பய­ணம் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­வி­டும் என்று தான் கரு­த­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கொவிட்-19 ஒடுங்­கிய பிற­கும் அத­னுடைய பாதிப்­பு­கள் நெடுங்­கா­லத்­திற்கு இருந்துவரும் என்று கூறிய திரு லீ, மக்­கள் தொலை­தூரத்­தில் இருந்து வேலை பார்க்க, இணைய வர்த்­த­கத்­தில் ஈடு­பட, பய­ணங்­களைக் குறைத்­துக்­கொள்ள பழக்­கப்­பட்டு இருப்­பார்­கள் என்றார்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்பு மிகக் குறை­வாக இருக்­கிறது என்­றா­லும் இந்­தப் போராட்­டம் இன்­னும் முடி­வ­டை­ய­வில்லை என்று பிரதமர் லீ எச்­ச­ரித்­தார்.

கொரோனா கிருமி மறு­ப­டி­யும் தலை­காட்டு ­வ­தைத் தடுக்க அர­சாங்­கம் மிகக் கடு­மை­யா­கப் பாடு­பட்டு வரு­கிறது என்று கூறிய திரு லீ, மீண்­டும் முடக்­கத்தை அறி­விக்­க­வும் அர­சாங்­கம் விரும்­ப­வில்லை என்­றார்.

அப்­ப­டிப்­பட்ட ஒரு சூழ்­நிலை மீண்டும் வந்­தால் மக்­க­ளின் மன­நி­லை­யில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும் என்­றும் அவர் கூறி­னார். இத்­த­கைய ஒரு சூழ்­நி­லை­யைத் தவிர்க்க முடிந்த வரை­யில் அரசாங்கம் பாடு­பட்டு வரு­வ­தா­க­வும் திரு லீ தெரி­வித்­தார்.

“அர­சாங்­கம் வேலை­க­ளைக் கட்­டிக்­காக்­க­வும் நிறு­வ­னங்­கள் தொடர்ந்து செயல்­ப­ட­வும் கூடு­மான வரை அனைத்­தை­யும் அர­சாங்­கம் செய்து வரு­கிறது.

“இது­வரை இல்­லாத அள­வுக்கு $100 பில்லி­யன் ஆத­ரவு நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது. இருப்­பில் இருந்து $52 மில்­லி­யன் வரை எடுத்­துச் செல­வி­டு­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லித்து வரு­கிறது,” என்று திரு லீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!