சிங்கப்பூர்-ஹாங்காங் பயணம் 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

சிங்கப்பூர் - ஹாங்காங் இடை­யில் இன்று தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த சிறப்­புப் பய­ணத் திட்­டம் 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து உள்­ளார்.

மீண்­டும் எப்­போது இந்­தப் பய­ணம் தொடங்­கும் என்­பது பற்றி பின்­னர் அறி­விக்­கப்­படும் என­வும் அவர் நேற்று பிற்பகலில் தமது ஃபேஸ்புக் வாயிலாகக் கூறினார்.

தாமும் ஹாங்­காங் (வணிக, பொரு­ளி­யல் மேம்­பாட்டு) செய­லா­ளர் எட்­வர்ட் யாவும் தற்­போ­தைய ஹாங்­காங் நில­வ­ரம் குறித்­தும் சிறப்­புப் பயண ஏற்­பா­டு­கள் குறித்தும் விவா­தித்த பின்­னர் பய­ணத் திட்ட தொடக்­கத்தை தள்­ளி­வைக்க முடிவு செய்­த­தாக திரு ஓங் விளக்கி உள்­ளார்.

“இரு வாரங்­க­ளுக்கு நிலை­மையை ஆராய்ந்த பின்­னர் புதி­தாக பய­ணம் தொடங்­கப்­படும் தேதி குறித்து முடி­வெ­டுத்து அறி­விக்­கப்­படும். ஏற்கெனவே பய­ணத்­திற்­குத் திட்­ட­மிட்டு இருந்­தோ­ரின் ஏமாற்­றத்­தை­யும் விரக்தி யை­யும் என்­னால் முழு­மை­யாக புரிந்­து­கொள்ள முடி­கிறது.

“இருப்­பி­னும் பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­தைக் கவ­னத்­தில் கொண்டு பய­ணத்­தைத் தள்ளி வைப்­பதே சிறந்­தது என்று நாங்­கள் கரு­து­கி­றோம்.

“கொவிட்-19 கிருமி இன்­னும் நம்­மி­டையே உள்­ளது என்­பதை இச்­சம்­ப­வம் தெளி­வாக நினை­வூட்­டு­கிறது. நாம் நமது வழக்­க­நி­லையை மீட்­டெ­டுக்­கக் கடு­மை­யாக போரா­டி­னா­லும் இதற்­கான பய­ணம் அவ்வளவு சுலபமான தாக இருக்காது. இருப்­பி­னும் பய­ணத்தை பத்­தி­ர­மா­கத் தொடங்­கும் நாளை எதிர்­நோக்­கு­வோம்,” என்று திரு ஓங் தமது பதி­வில் தெரி­வித்துள்­ளார்.

சிறப்­புப் பய­ணம் ஞாயிற்­றுக்­கி­ழமை (இன்று) தொடங்­கும் என்­றும் இருப்­பி­னும் அதனை நிறுத்தி வைப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்­றும் நேற்­றுக் காலை­யில் அவர் கூறி­யி­ருந்­தார்.

புதிதாக 43 பேருக்கு தொற்று

இதற்­கி­டையே, ஹாங்­காங்­கில் நேற்று புதி­தாக 43 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 36 பேர் உள்­ளூர்­வா­சி­கள் மற்­றும் 13 பேர் நோயா­ளி­க­ளோடு தொடர்­பில் இல்­லா­த­வர்­கள். வெள்­ளிக்­கி­ழமை 26 பேர் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் நேற்று அந்த எண்­ணிக்கை வேக­மாக உயர்ந்­தது.

புதிய சம்­ப­வங்­க­ளை­யும் சேர்த்து ஹாங்­காங்­கில் நேற்று வரை 5,560 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. தொற்று கார­ ண­மாக இது­வரை 108 பேர் மாண்டு­விட்­ட­னர்.

முன்­ன­தாக, சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­கிற்­கும் இடை­யில் கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னான சிறப்­புப் பய­ணம் திட்­ட­மிட்­ட­படி தொடங்­கும் என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அதன் அறிக்­கை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.

“ஹாங்­காங்­கில் கடந்த சில நாட்­க­ளாக கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தால் கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அங்­கி­ருந்து வரு­வோர் சாங்கி விமான நிலை­யத்­தில் பிசி­ஆர் எனப்­படும் பல்­

ப­டிய தொடர்­வினை பரி­சோ­தனை செய்து கொள்­வது அவ­சி­யம் என்­றும் அது குறிப்­பிட்டு இருந்­தது.

“புதிய கிரு­மிப் பர­வல் குழு­மங்­கள் கண்­ட­றி­யப்­பட்டு உள்­ள­தால் அடுத்த சில நாட்­க­ளுக்கு ஹாங்­காங்­கில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. சிங்­கப்­பூர், ஹாங்­காங் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­கி­றார்­கள்,” என்­றது ஆணை­யம்.

இரு­த­ரப்பு சிறப்­புப் பயண ஏற்­பாட்­டின்­படி ஏழு நாட்­கள் கணக்­கெ­டுப்­பில் தொடர்­புப்­ப­டுத்­தப்­ப­டாத கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை சரா­ச­ரி­யாக நாள் ஒன்­றுக்கு ஐந்­துக்கு மேல் கூடி­னால் பயண ஏற்­பா­டு­கள் தற்­கா­லி­க­மாக ரத்து செய்­யப்­பட வேண்­டும். ஹாங்­காங்­கில் இப்­போ­துள்ள நில­வ­ரப்படி சரா­ச­ரி­யாக 2.14 சம்­ப­வங்­க­ள் உள்­ள­தென ஆணை­யம் விளக்கி இருந்­தது.

அதேநேரம் தமது நாட்­டின் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அபாயகட்­டத்தை எட்டி இருப்­ப­தாக ஹாங்­காங் உணவு மற்­றும் சுகா­தா­ரத் துறைச் செய­லா­ளர் சோஃபியா சான் வெள்­ளிக்­கி­ழமை கூறி­யி­ருந்­தார்.

இதற்கிடையே, இருநாட்டு விமானங்கள் மீண்டும் எப்போது பயணத்தைத் தொடங்கும் என்பது குறித்து டிசம்பர் தொடக்கத்தில் இரு அரசாங்கங்களும் அறிவிக் கும் என்று ஹாங்காங் வணிக, பொருளியல் மேம்பாட்டு செய லாளர் எட்வர்ட் யாவ் நேற்று பிற் பகலில் ஊடகங்களிடம் கூறினார்.

சிங்கப்பூர்-ஹாங்காங் இடை யிலான சிறப்புப் பயண ஏற்பாடு கள் குறித்து அக்டோபர் நடுப் பகுதியில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஹாங்காங்கில் தொற்றுச் சம்பவங்கள் திடீர் என்று வேகமெடுத்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!