சிங்கப்பூரில் 37 பேரிடம் விசாரணை, 16 வெளிநாட்டவர் நாடுகடத்தல்

பிரான்­சி­லும் மற்ற இடங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதனை அடுத்து, அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 37 பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­னர்; 16 வெளி­நாட்­டி­னர் சொந்த நாடு­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர்.

தீவி­ர­வா­தப் போக்­கு­டன் செயல்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­பட்ட தற்­கா­கவோ கல­வ­ரம் அல்­லது வன்­மு­றை­யைத் தூண்­டும் விதத்­தில் கருத்­து­ரைத்­த­தற்­கா­கவோ அதி­கா­ரி­கள் 14 சிங்­கப்­பூரர்­க­ளை­யும் 23 வெளி­நாட்­டி­ன­ரை­யும் விசா­ரித்­த­னர்.

குறிப்­பாக அவர்­களில் பெரும்­பா­லா­னோர் பிரெஞ்சு ஆசி­ரி­யர் சேமு­வல் பேட்­டி­யின் தலை துண்­டிக்­கப்­பட்­ட­தை­யும் அதைத் தொடர்ந்து பிரான்­சி­லும் மற்ற இடங்­க­ளி­லும் இடம்­பெற்ற தாக்­கு­தல்­க­ளை­யும் ஆத­ரித்­த­னர் என்று உள்­துறை அமைச்சு குறிப்­பிட்­டது.

நபி­கள் நாய­கத்­தின் கேலிச் சித்­தி­ரத்தை வெளி­யிட்ட சார்லி ஹெப்டோ எனும் பிரெஞ்­சுச் சஞ்­சி­கை­யைத் தற்­காத்­த­தற்­காக அந்­நாட்டு அர­சுக்கு எதி­ரா­க­வும் பிரெஞ்சு அதி­பர் இம்­மா­னு­வல் மெக்­ரோ­னுக்கு எதி­ரா­க­வும் வன்­மு­றை­யைத் தூண்­டி­விட்­ட­னர். சிலர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இழி­வான கருத்­து­க­ளைக் கூறி­ய­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை விசா­ர­ணையை முடித்­த­வு­டன் 15 பங்­­ளா­தே­‌ஷி­ய­ரும் மலே­சி­யர் ஒரு­வரும் நாடு­க­டத்­தப்பட்­ட­னர்.

தீவி­ர­வாத போக்­கிற்கு மாறிய மலே­சி­யர் சிரி­யா­விற்கோ பாலஸ்­தீ­னத்­திற்கோ சென்று, ஆயு­தம் ஏந்தி வன்­மு­றை­யில் ஈடு­ப­டத் திட்ட­மிட்டி­ருந்­தார்.

நாடு­க­டத்­தப்­பட்ட 15 பங்­ளா­தே­‌ஷி­யர்­களில் பெரும்­பா­லானோர் கட்­டு­மா­னத் துறை­யில் பணி­யாற்றி வந்­த­னர்.

அண்­மை­யில் பிரான்­சில் நடந்த பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­க­ளின் எதி­ரொ­லி­யாக சமூக ஊட­கம் வழி­யாக வன்­மு­றையை அல்­லது கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் அவர்­கள் கருத்­து­க­ளைப் பதி­விட்­ட­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. எஞ்­சிய ஏழு வெளி­நாட்­ட­வர்­கள் மீதான விசா­ரணை தொடர்­வதாக அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் தாக்­கு­தல்­களையோ போராட்­டங்­க­ளையோ நடத்த அவர்­களில் எவ­ரும் திட்­ட­மி­ட­வில்லை என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

தற்­போது, 19 முதல் 62 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பத்­துப் பேர், பெண்­கள் நால்­வர் என 14 சிங்­கப்­பூ­ரர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சமய மறு­வாழ்­வுக் குழு­வின் கருத்­த­ரங்­கில் நேற்று கலந்­து­கொண்டு பேசிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­மு­கம், எந்­தச் சம­யத்­தை­யும் பின்­பற்­றும் உரி­மையை வழங்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரும் பிரான்­சும் சம­யச் சார்­பற்ற நாடு­க­ளாக இருந்­தா­லும், இரு நாடு­க­ளின் அணு­கு­மு­றை­களும் மாறுபட்­டவை என்­றார்.

“தலை­யீடு ஏது­மின்றி பிரான்ஸ் அணுக விரும்­பு­கிறது. ஆனால் நாங்­கள் தலை­யி­டு­வோம். பேச்சு சுதந்­தி­ர­மும் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­ளும் கட­மை­யும் ஒன்­றோடு ஒன்று சேர்ந்து செயல்­ப­ட­வேண்­டும் என்­பது நம் நிலைப்­பாடு,” என்று கூறி­னார் அமைச்­சர்.

“சம­யச் சார்­பற்ற அர­சாங்­கம் என்ற முறை­யில், அனைத்­துச் சம­யங்­க­ளுக்­கும் நாங்­கள் நடு­நி­லை­யா­ன­வர்­கள். ஆனால் பெரும்­பான்­மை­யி­னரோ சிறு­பான்­மை­யி­னரோ, எந்த ஒரு சம­யக் குழு­வை­யும் எவ­ரும் தாக்­கவோ அவ­ம­திக்­கவோ அனு­ம­திக்­க­மாட்­டோம்,” என்று கேலாங் கதிஜா பள்­ளி­வா­ச­லில் நடந்த கருத்­த­ரங்­கில் அவர் உறுதி­யா­கச் சொன்­னார்.

அண்­மை­யில் பிரான்ஸ், சவூதி அரே­பியா, ஆஸ்­தி­ரியா ஆகிய நாடு­களில் நடத்­தப்­பட்ட பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­களை அடுத்து, இங்­கும் அது­போன்ற தாக்­கு­தல் இடம்­பெ­றா­மல் தடுக்­கும் வித­மாக உள்­து­றைக் குழு பாது­காப்­பைப் பலப்­ப­டுத்தி, கண்­கா­ணிப்பு நட­வடிக்­கை­களை அதி­க­ரித்­துள்­ளது.

போலிஸ் படை­யும் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­ய­மும் தங்­க­ளது பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் சுற்­றுக்­கா­வல் பணி­களை­யும் முடுக்­கி­விட்­டுள்­ளன என்­று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!