சுடச் சுடச் செய்திகள்

நவம்பர் 30 முதல் முகக்கவசம் விநியோகம்

தெமாசெக் அறநிறுவனம் நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை முகக்கவசத்தை பொது மக்களுக்கு வழங்கும். நாடளாவிய முறையில் அது மூன்றாவது முறையாக முகக்கவசங்களை வழங்குகிறது. அவற்றை ஒரு முறைக்கு மேலும் பயன்படுத்தலாம். 

அடையாள அட்டையைக்  கொண்டு சிங்கப்பூர்வாசிகள் அனைவரும் முகக்கவசத்தை இலவசமாகப் பெறலாம்.  

ஒவ்வொரு பாக்கெட்டிலும் இரண்டு முகக்கவசங்களும் மூன்று வடிப்பான்களும் இருக்கும்.

அவற்றை நாடு முழுவதிலும் இருக்கும் 1,200 தானியக்கச் சாதனங்களில் இருந்து காலை 10 மணி முதல் மக்கள் பெற்றுக்கொள்ளலாம். 

பேருந்து சந்திப்பு நிலையங்கள், குடியிருப்பாளர் குழுக்கள், தெமாசெக் ஷாப்ஹவுஸ், பிளாசா சிங்கப்பூரா ஆகியவை உள்ளிட்ட 800க்கும் அதிக இடங்களில் அத்தகைய சாதனங்கள் இருக்கின்றன. 

முகக்கவசங்கள் சிறியவை, நடுத்தரமானவை, பெரியவை, ஆகப் பெரியவை என்ற நான்கு அளவுகளில் இருக்கும். 

சிறியவை எட்டு வயது வரைப்பட்ட சிறார்களுக்கு உரியவை. இவற்றைச் சமூக மன்றங்கள், பிளாசா சிங்கப்பூரா, தெமாசெக் ஷாப்ஹவுஸ் ஆகியவற்றில் இருக்கும் சாதனங்களில் மட்டும் பெறலாம். 

முகக்கவசம் அளவு பற்றிய விளம்பரங்கள் டிசம்பர் 5 மற்றும் 12ஆம் தேதிகளில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளில் இடம்பெறும். 

எளிதாக மூச்சுவிடக்கூடிய நுண்கிருமிகளைத் தடுக்கின்ற முப்பரிமாண முகக்கவசங்கள் விநியோகம் பற்றி தெமாசெக் தலைமை நிர்வாகி  ஹோ சிங் அறிவித்தார். இவற்றை ‘புரோஷீல்டு’ என்ற உள்ளூர் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்த முகக்கவசங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டது. வெளிப்புற உறை பாக்டீரியா கிருமிகளை உள்ளே விடாது, நடுவில் இருப்பது வடிகட்டும் உறை. மூன்றாவது நுண்ணிய உறை எச்சில் துகள்களை உறிஞ்சும். 

கூட்டம் குறைந்த இடங்களில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போதும் இதைப் பயன்படுத்தலாம். வடிப்பான்களை புதிய முகக்கவசத்துடன் அல்லது வேறு முகக்   கவசத்துடன் பயன்படுத்தலாம், முகக்கவசத்தையும் வடிப்பான்களையும் 50 முறை சுத்தப்படுத்தி பயன்படுத்தலாம். 

கூடுதலாக முகக்கவசம், வடிப்பான்கள் தேவை எனில்  இணையத்தில்  DBS Paylah! செயலி மூலம் தலா $12 விலையில் திங்கட்கிழமை முதல் வாங்கலாம்.

இலவசமாகக் கொடுக்கப்படும் முகக்கவசங்களைப் பரிசோதித்துப்  பார்த்துவிட்டு எல்லாம் பொருத்தமாக இருக்கிறது என்றால் பிறகு தேவை எனில் கூடுதலாக இவற்றை இணையம் வழி வாங்கிக்கொள்ளும்படி தெமாசெக் ஆலோசனை கூறியது.

இணையத்தில் வாங்குவதற்கு முகக்கவசத்தின் அளவைப் பொறுத்து கட்டுப்பாடு உள்ளது. 

இந்த அறநிறுவனம் ஜூன் முதல் அக்டோபர் வரை முதல் இரண்டு விநியோகங்கள் மூலம் மொத்தம் ஏறக்குறைய 17 மில்லியன் முகக்கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon