'சிங்கப்பூரர் வருவாய் உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வு குறைவு'

சிங்கப்பூரர்களின் வரு­வாயை அர­சாங்­கம் அதி­க­ரித்து இருக்­கிறது.

வருமான ஏற்­றத்­தாழ்வை அது குறைத்து இருக்­கிறது. அதே நேரத்­தில் வீடு, சுகா­தா­ரப் பரா­மரிப்பு போன்ற அத்­தி­யா­வ­சி­யத் தேவை­களைத் தொடர்ந்து கட்­டுப்­ப­டி­யா­கக்கூடிய அள­வில் அது நிலை­நாட்டி வந்­தி­ருக்­கிறது.

தொழில்­து­றைத் தோழனாகத் தொடர்ந்து திக­ழும் சிங்­கப்­பூர், அனைத்­து­லக ரீதி­யில் போட்­டித்­தி­ற­னோ­டும் விளங்­கு­கிறது.

இவை எல்­லாம் 2019 பொதுச் சேவை­யின் முக்­கிய சாத­னை­களில் இடம்­பெற்றுள்ளன.

நிதி அமைச்சு நேற்று வெளி­யிட்ட புதிய அறிக்கை இவ்­வாறு தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூர் பொதுச் சேவையின் செயல்­தி­றன் அறிக்கை இரண்­டாண்­டுக்­கு ஒரு முறை வெளி­யி­டப்­ப­டு­கிறது.

‘சிங்­கப்­பூர் பொதுச்­சேவை செயல்­தி­றன் மதிப்பாய்’ என்ற அந்த அறிக்கை பொரு­ளி­யல், சமூக ஆத­ரவு போன்ற துறை­களில் முக்­கிய புள்­ளி­வி­வ­ரங்­களைத் தொகுத்துக் கூறுகிறது.

முந்­தைய ஆண்­டு­க­ளைப் போல் இல்­லா­மல் இந்த ஆண்டு மதிப்பாய்வில் கொவிட்-19 கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் முழு நாடும் மேற்­கொள்­ளும் முயற்­சி­களை அங்­கீ­க­ரிப்­ப­தற்­காகவே ஒரு சிறப்புப் பிரிவு ஒதுக்­கப்­பட்டு இருக்­கிறது.

‘ஒரே மக்­க­ளாக முன்­பை­விட வலு­வாக தலை நிமிர்­வோம்’ என்ற தலைப்­பி­லான அந்­தச் சிறப்­புப் பிரிவு, சிங்­கப்­பூ­ரர்­களும் நிறு­வ­னங்­களும் சமூ­க­மும் அர­சாங்­கத்­து­டன் சேர்ந்து தேவைப்­படு­வோருக்கு உத­வி­யதை வெளிச்­சம் போட்டு காட்­டு­கிறது.

மதிப்பாய்வு அறிக்­கை­யில் நான்கு முக்­கிய அம்­சங்­கள் இருக்­கின்­றன. ‘வரு­வாய் ஏற்­றத்­தாழ்வு குறைவு, அதிகமான வேலை வாய்ப்­பு­கள்’ என்­பது அவற்­றில் ஓர் அம்­சம். ஐந்து ஆண்­டு­களிலேயே முதன்­மு­த­லாக 2019ல் வரு­வாய் ஏற்­றத்­தாழ்வு 0.4 என்ற அள­விற்கும் குறை­வாக இறங்கி 0.398 ஆக இருந்­தது.

அதே­வே­ளை­யில், வேலை வாய்ப்­பு­களில் அனைத்­தை­யும் தழு­விய நிலை­யில் ஆக்­க­க­ர­மான போக்கு தென்­பட்­டது. கீழ்நிலை யைச் சேர்ந்த 20 விழுக்­காட்­டி­னர், நடுத்­தர பிரி­வைச் சேர்ந்­த­வர்­க­ளை­விட வேக­மாக மேல் எழுந்­த­னர். வேலை­யில் சேர்ந்த சிங்­கப்­பூர்­வா­சி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தது. இவர்­களில் பாதிக்­கும் அதி­க­மா­ன­வர்­கள் நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர்­கள்.

புதிய தேர்ச்­சி­க­ளைக் கற்­றுக்­கொள்ள அதிக வாய்ப்­பு­களும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இருந்­தன. ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் திட்­டங்­க­ளால் சென்ற ஆண்டு முடிவு வாக்­கில் 500,000 மக்­களும் 14,000 நிறு­வனங்­களும் பய­ன­டைந்­தி­ருந்­தன.

ஆனால் நாட்­டின் மொத்த கரு­வள விகி­தம் சென்ற ஆண்­டில் 1.14 ஆகக் குறைந்­தது. குழந்தை களைப் பெற்றுக்கொள்ள குடும்­பங்­களை ஊக்­கு­விக்­கும் முயற்சி­கள் இடம்­பெற்­றன.

உல­கி­லேயே மிக­வும் போட்­டித்­தி­றன் வாய்ந்த பொரு­ளி­யல்­களில் சிங்­கப்­பூர் முத­லி­டத்­தில் இருப்­ப­தாக 2019ல் ‘உல­கப் பொரு­ளி­யல் அரங்­கம்’ என்ற அமைப்பும் 2020ல் ‘அனைத்­துலக நிர்­வாக மேம்­பாட்­டுக் கழ­கம்’ என்ற அமைப்­பும் தெரி­வித்­தன.

கொவிட்-19 சூழலிலும் பொருளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்­களில் $13 பில்­லி­யன் நிலைச்சொத்து முத­லீட்டு கடப்­பா­டு­க­ளைப் பெற்­றது. அதிகமான நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மா­யின. உல­கி­லேயே அதி­க­ தி­றன் வாய்ந்த ஊழி­யர் அணி­யைக் கொண்ட 10 நாடு­க­ளின் பட்டிய லில் உள்ள ஆசி­யா­வைச் சேர்ந்த ஒரே நாடு சிங்­கப்­பூர்­தான்.

தொழில்­க­ளைத் தொடங்கி நடத்­து­வ­தற்­குத் தோதான சூழ­லும் மின்­னி­லக்­கச் சேவை­களை எட்­டு­வ­தற்கு வச­தி­யான ஏற்­பாடு­களும் சிங்­கப்­பூ­ரில் வெகு­சி­றப்­பாக உள்ளதாக உலக வங்­கி­யின் அட்­ட­வணை குறிப்­பி­டு­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக வளர்ச்­சி­யும் வேலை வாய்ப்­பும் மெது­வ­டைந்துள்ளன. கொரோனா வும் உல­கில் பதற்றமும் நிலவி வரும் கட்டத்தில், குடி­மக்­களும் நிறு­வ­னங்­களும் ஒன்­றா­கச் சேர்ந்து எதிர்­கால கொள்­கைகளை உரு­வாக்க வேண்­டி­யது முக்­கி­ய­மானது என்கிறது அறிக்கை.

சிறந்த எதிர்­கால சிங்­கப்­பூர் சமூ­கத்­தை­யும் பொரு­ளி­ய­லை­யும் சாதித்து வலு­வாக தலை நிமி­ர­சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் சேர்ந்து அர­சாங்­கம் பாடு­படும் என பொதுச் சேவைத் தலை­வர் லியோ யிப் உறு­தி­கூறி இருக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!