சிங்கப்பூரில் அரசாங்கப் பணியாளர்களுக்கு ஆண்டிறுதி போனஸ் கிடையாது

கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடி காரணமாக பொருளியல் சரிவு ஏற்பட்டு இருப்பதால் சிங்கப்பூரின் 85,000 அரசாங்க ஊழியர்களுக்கு நடப்பாண்டில் ஆண்டிறுதி போனஸ் வழங்கப்படாது என பொதுச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அரையாண்டு போனசும் வழங்கப்படாத நிலையில் இவ்வாண்டில் வருடாந்திர மாறுவிகித சம்பளத்தொகையாக எதையும் அரசாங்க ஊழியர்கள் பெறமாட்டார்கள்.

அதே நேரத்தில், அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் வழக்கம்போல 13வது மாத போனஸ் வழங்கப்படும்.

அத்துடன், இந்தச் சிரமமான வேளையில் குறைந்த வருமான அரசாங்க ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவளிக்கும் விதமாக, கிட்டத்தட்ட 2,400 பேருக்கு ஒருமுறை மட்டும் சிறப்புத்தொகையாக $1,200 வழங்கப்படும் என பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்­து­டன், இந்­தச் சிர­ம­மான வேளை­யில் குறைந்த வரு­மான அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக, கிட்­டத்­தட்ட 2,400 பேருக்கு ஒரு­முறை மட்­டும் சிறப்­புத்­தொ­கை­யாக $1,200 வழங்­கப்­படும் என பொதுச் சேவைப் பிரிவு தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இவ்­வாண்­டில் நாட்­டின் பொரு­ளி­யல் 6% முதல் 6.5% வரை சுருங்­கக்­கூ­டும் என மதிப்­பி­டப்­பட்­டுள்ள நிலை­யில், இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொதுச் சேவைப் பிரிவு கூறி­யது.

மனி­த­வள அமைச்­சின் முதற்­கட்ட மதிப்­பீ­டு­க­ளின்­படி, இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் ஒட்­டு­மொத்த, உள்­ளூர்­வா­சி­கள் மற்­றும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான வேலை­யின்மை விகி­தங்­களும் அதி­க­ரித்­துள்­ளன.

“இந்­தச் சவால்­மிக்க பொரு­ளி­யல் சூழ­லில் சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் பொதுச் சேவைத் துறை இணைந்து நிற்­கிறது. பொதுச் சேவைத் தொழிற்­சங்­கங்­க­ளு­டன் அணுக்­க­மாக ஆலோ­சித்­த­பின், அர­சாங்­கப் பணி­யா­ளர்­க­ளுக்கு ஆண்­டி­றுதி வரு­டாந்­திர மாறு­விகித சம்­ப­ளத்­தொகை வழங்­கு­வதில்லை என அர­சாங்­கம் முடி­வு ­செய்துள்ளது,” என்று பொதுச் சேவைப் பிரி­வின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

“கொரோனா தொற்­றுக்கு எதி­ரான தேசிய போராட்­டத்­தில், எங்­க­ளது பொதுச் சேவை அதி­கா­ரி­கள் கடந்த பல மாதங்­க­ளாக களைப்­ப­றி­யாது உழைத்த­னர். பொதுச் சேவை அதி­கா­ரி­கள் அனை­வ­ரது கடின உழைப்­பை­யும் அர­சாங்­கம் பெரி­தும் மெச்­சு­கிறது.

“கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போராட்­டம் தொடர்­கிறது. இவ்­வே­ளை­யில், கிரு­மித்­தொற்­றை­யும் பொரு­ளி­ய­லில் அது ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்­தை­யும் எதிர்­கொள்ள பொதுச் சேவைப் பிரி­வி­னர் தொடர்ந்து கடி­ன­மாக உழைப்பர்; குடி­மக்­க­ளு­ட­னும் பங்­கா­ளி­க­ளு­ட­னும் கைகோத்­துச் செயல்­படுவர். நாம் அனைவரும் ஒன்­றாக இணைந்து, இந்த நெருக்­கடி­யில் இருந்து மீண்டு, வலு­வா­ன­வர்­க­ளாக உரு­வெ­டுப்­போம்,” என்று பொதுச் சேவைப் பிரிவு தெரி­வித்­து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!