பாதுகாப்பை உடனே உறுதிசெய்க: சிங்கப்பூரில் கட்டுமானத்துறைக்கு கோரிக்கை

பாதுகாப்பை உடனே உறுதிசெய்க: சிங்கப்பூரில் கட்டுமானத்துறைக்கு கோரிக்கை

2 mins read
adbbcbbe-ac72-44ed-8150-529d99e04121
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் இந்த வாரத்­தில் நான்கு நாட்­களில் கட்­டு­மானம் மற்­றும் கடல்துறையில் 3 வேலை­யிட உயிர்­பலி விபத்­து­கள் நிகழ்ந்­து­விட்­டன.

இத­னால் அதிர்ச்­சி­யும் கவ­லை­யும் அடைந்­துள்ள வேலையிட பாது­காப்பு சுகா­தார மன்­ற­மும் சிங்­கப்­பூர் ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் சங்க நிறு­வ­ன­மும் (SCAL) கட்­டு­மான தொழில்­து­றைக்கு அவ­சர வேண்டு­கோள் விடுத்­துள்­ளன.

அந்­தத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த எல்லா நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்­புக்­கான ஏற்­பா­டு­களை எல்­லாம் முற்­றி­லும் பரி­சோ­தித்து ஏதே­னும் குறை­கள் இருந்­தால் உட­ன­டி­யாக அவற்­றைச் சரி­செய்­ய­வேண்­டும் என அவை கோரிக்கை விடுத்­துள்­ளன.

வேலை­யி­டங்­களில் பாது­காப்பு சுகா­தார நடை­மு­றை­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை அலட்­சி­யப்­ப­டுத்­தி­விடக்கூடாது என்­ப­தையே இந்த விபத்­து­கள் காட்­டு­வ­தாக வேலை­யிட பாது­காப்பு சுகா­தார மன்­றத்­தின் தலை­வர் ஜான் இங் கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தார்.

இந்­தத் தொழில்­துறை முழு­வதும் ஊழி­யர்­க­ளின் பாது­காப்­பை­யும் சுகா­தா­ரத்­தை­யும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் உட­ன­டி­யாக எடுக்­கப்­பட வேண்­டும். ஏதே­னும் குறை­பா­டு­கள் இருந்­தால் அவை உட­ன­டி­யா­கச் சரி­செய்­யப்­பட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

குறிப்­பாக கொவிட்-19 சூழ­லில் ஊழி­யர்­கள் வேலைக்­குத் திரும்பி இருக்­கி­றார்­கள் என்­ப­தால் அவர்­கள் வேலை­யி­டங்­களில் பாது­காப்­பில் அலட்­சி­ய­மாக இருந்­து­வி­டக் கூடும். ஆண்டு முடிவு நெருங்­கு­வ­தால் நிறு­வ­னங்­களும் குறித்த நேரத்­தில் வேலை­களை முடிப்­ப­தில் கவ­னம் செலுத்­தக்­கூ­டும். இந்­தச் சூழ்­நி­லை­யில் அவை பாது­காப்பை அலட்­சி­யப்­ப­டுத்­தி­வி­டக்கூடாது என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கட்­டு­மான நிறு­வ­னங்­கள் அனைத்­தும் வேலை­களை கொஞ்ச நேரம் நிறுத்­தி­விட்டு பாது­காப்பு நடை­மு­றை­கள் அனைத்­தை­யும் துல்­லி­ய­மாக நூற்­றுக்­கு­நூறு பரி­சீலித்து அலசி ஆராய்ந்து குறை எது­வும் இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்று கட்­டு­மா­னக்­கா­ரர்­கள் சங்க நிறு­வ­னத் தின் தலை­வர் இங் யெக் மெங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக பல நாள் வேலை­யில்­லா­மல் இருந்­து­விட்டு இப்­போது வேலைக்­குத் திரும்பி இருக்­கும் மேற்­பார்­வை­யா­ளர்­களும் ஊழி­யர்­களும் கொஞ்­சம் மெத்­த­ன­மாக இருந்­து­விட வாய்ப்பு­ இ­ருப்­பதை அவர் சுட்­டி­னார்.

ஆகை­யால் முத­லா­ளி­கள் ஊழி­யர்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என்­றார் அவர்.

மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, கடந்த அக்­டோ­ப­ரில் ஜூரோங் ஏரி தோட்ட கட்­டு­மான வேலை­யி­டத்­திற்­குச் சென்­றி­ருந்­தார். வேலை­யிட பாது­காப்­பும் சுகா­தா­ர­மும் மிக முக்­கி­ய­மா­னவை என்­பதை அவர் அப்­போது வலி­யு­றுத்­தி­னார். அதை அறிக்­கைச் சுட்­டிக்­காட்­டி­யது.

நிறு­வ­னங்­கள் மீண்­டும் பணி­க­ளைப் பாது­காப்­பான முறை­யில் தொடங்க உத­வும் வகை­யில் பல ஏற்­பா­டு­களும் வளங்­களும் இருப்­பதை சுட்­டிய அறிக்கை, பாதுகாப்­பான முறை­யில் மறு­ப­டி­யும் வேலை­களைத் தொடங்குவதை உறு­திப்­படுத்த தேவை­யான நட­வ­டிக்­கை­களை முழு­மை­யாக நிறு­வ­னங்­கள் அம­லாக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யது.

குறிப்புச் சொற்கள்