தேக்கா சென்டரில் 876 பேரில் 2 பேருக்கு கொவிட்-19 தொற்று

2 mins read
da79bbda-1f5c-4b6c-8112-d87d66798f47
வழக்கமான சுத்திகரிப்புப் பணிகளுக்காக நேற்று மூடப்பட்ட தேக்கா சந்தை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேக்கா சென்டரிலும் அதைச் சுற்­றி­லும் உள்ள பகுதிகளிலும் தொழில் நடத்­தும் 876 உணவு அங்­கா­டிக் கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

அவர்­களில் இரண்டு பேருக்­குத் தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது. அந்­தக் கடைக்­கா­ரர்­கள் சமூக விழிப்­பு­ணர்வு பரி­சோதனைக்­குச் சென்­ற­போது இந்த நில­வ­ரங்­கள் தெரி­ய­வந்­தன.

அந்த இரு­வ­ருக்­கும் தொற்று ஏற்கெனவே ஏற்­பட்­டு இருக்­கும் வாய்ப்­புள்­ள­தாக பரி­சோ­த­னை­கள் மூலம் தெரி­ய­வந்­த­தாக ஞாயிற்றுக்­கி­ழமை இரவு சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. மற்ற 874 பேருக்கும் தொற்று இல்லை என்­ப­தும் தெரி­ய­வந்­தது.

தொற்று இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­துள்ள இரண்டு பேரில் இரண்­டா­ம­வ­ருக்கு வெள்­ளிக்­கி­ழமை தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்டதாக­வும் அமைச்சு தெரி­வித்­தது. 41 வய­துள்ள இந்த ஆட­வர் இந்­தி­யா­வைச் சேர்ந்­த­வர். இங்கு பண்ட­க­சாலை உதவி ஊழி­ய­ராக வேலை அனு­ம­திச் சீட்­டின் பேரில் வேலை பார்க்­கி­றார்.

இந்த ஆட­வர் உட­லில் தொற்று இருந்­த­தற்­கான அறி­கு­றி­கள் வெளியே தெரி­ய­வில்லை.

பரி­சோ­த­னை­யில் அவ­ருக்­குத் தொற்று இருப்­ப­தா­கத் தெரி­ய­வந்­ததை அடுத்து இந்த ஆட­வர் தேசிய தொற்­று­நோய் நிலையத்­திற்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

கஃப் ரோட்­டில் இருக்­கும் பண்டகச் சாலை­யில் சரக்­கு­களைச் சரி­பார்க்­கும் பணி­யை­யும் அங்­கி­ருந்து எண் 1 கேம்பல் லேனில் இருக்­கும் ஜோதி புஷ்­பக்­ கடைக்­குப் பொருட்­க­ளைக் கொடுக்­கும் வேலை­யை­யும் அவர் பார்த்து வந்­தார். கடை­யில் வாடிக்­கை­யாளர்­கள் எவ­ரோ­டும் அவருக்குத் தொட­ர்பு கிடை­யாது என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இந்த ஆட­வ­ருடன் சேர்ந்து கஃப் ரோட்­டில் தங்கி இருக்­கும் இரண்டு வெளி­நாட்டு ஊழி­யர்­களை­யும் பரி­சோ­தித்­த­போது அவர்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பது உறு­தி­யா­னது.

வெளிநாடுகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று சிங் கப்பூருக்கு வந்த ஏழு பேருக்குத் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

வீட்டிலேயே தனித்து இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்