பிரதமர் லீ: அமைச்சரவை முடிவுகளை மாற்றும் அதிகாரம் எனக்கில்லை

முன்­னாள் பிர­த­ம­ர் அம­ர­ர் திரு லீ குவான் இயூ வாழ்ந்த எண் 38 ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்­கக்­கூடாது என்று தமது அமைச்­சர்­கள் கூடி எடுக்­கும் முடிவை மாற்­றும் சுதந்­தி­ரம் தமக்கு இல்லை என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­து உள்­ளார்.

‘தி ஆன்­லைன் சிட்­டி­சன்’ என்ற இணை­யத்­த­ளத்­தின் ஆசி­ரி­ய­ரான டெரி ஸுக்கு எதி­ரான அவ­தூறு வழக்­கின் இரண்­டாம் நாளான நேற்று சாட்­சி­ய­ம­ளித்த பிர­த­மர் லீ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

தமது தந்­தை­யான திரு லீ குவான் இயூ, பிர­த­ம­ரான தாம் கருத்­தில்­கொள்ள வேண்­டிய அம்­சங்­க­ளை­யும் பிர­த­மர் என்ற முறை­யில் தமக்­குள்ள கட்­டுப்­பா­டு­க­ளை­யும் நன்கு அறிந்­தி­ருந்­த­தா­கக் கூறிய திரு லீ, குடும்ப சொத்து தொடர்­பான விவ­கா­ரத்­தில் தாமே முடி­வு­கள் அனைத்­தை­யும் எடுப்­பதாக திரு டெரி ஸுவின் வழக்­க­றி­ஞர் முன்­வைத்த குற்­றச்­சாட்டை மறுத்­தார்.

திரு டெரி ஸு தமது இணை­யத்­தள கட்­டு­ரை­யில், எண் 38 ஆக்ஸ்லி சாலை வீடு அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக தவ­றாக நம்ப வைத்­த­தாக பிர­த­ம­ரின் சகோ­தரி டாக்­டர் லீ வெய் லிங் கூறி­யதை மேற்­கோள் காட்­டி­யி­ருந்­தார். இது தொடர்­பாக திரு டெரி ஸு மீது பிர­த­மர் லீ தொடர்ந்த அவ­தூறு வழக்­கில் தற்­பொ­ழுது அவர் சாட்­சி­ய­ம­ளித்து வரு­கி­றார்.

அமைச்­சர்­கள் எடுக்­கும் முடிவை பிர­த­மர் என்ற முறை­யில் ஏன் திரு லீயால் மாற்ற முடி­யாது என்று எதிர்த்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் தொடர்ந்து கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்த திரு லீ, தமது தந்­தை­யின் விருப்­பங்க­ளைப் பூர்த்தி செய்­வ­தற்­காக தமது அமைச்­சர்­க­ளின் முடி­வுக்கு மாற்­றாக செயல்­ப­டு­வது என்று முற்­பட்­டால், பிர­த­மர் என்ற முறை­யில் தாம் கட­மை­யைச் செய்­வ­தாக மேற்­கொண்ட பிர­மா­ணத்­திற்கு எதி­ராக செயல்படுவதாகும் என்­றார்.

அது சிங்­கப்­பூ­ருக்கு எதி­ரான செயலாகும் என்று பிர­த­மர் தெரி­வித்­தார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்­குப் பின், வீடு தொடர்­பாக அர­சாங்­கம் என்ன முடிவு எடுக்­கக்­கூ­டும் என்ற தமது மதிப்­பீட்டை தாம் தமது தந்தை திரு லீ குவான் இயூ­வி­டம் கூறி­ய­தாக பிர­த­மர் விளக்­கி­னார்.

“நீங்­கள் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பங்­கேற்­று இருக்கிறீர்கள். அவர்­க­ளின் கருத்­து­களை கேட்டுத் தெரிந்­து­ ைவத்துள்ளீர்கள். அவர்­கள் இவ்­வாறு எண்­ணம் கொண்டு இருக்­கை­யில், பொது­மக்­களும் அதே கருத்­தைக் கொண்­டுள்­ள­போது, அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அவர்­க­ள் கூறிய கருத்­து­களைப் புறக்­கணித்­து­விட்டு என்­னால் அந்த வீட்டை இடிக்க முடி­யாது.

“அந்த வீடு அர­சி­த­ழில் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்­பதை நான் ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டி­யி­ருக்­கும்.

“அப்­படி நான் பிர­த­ம­ராக இல்­லா­மல், அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­திற்கு நான் தலைமை தாங்­காத நிலையில், அந்த வீடு அர­சி­த­ழில் வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கான சாத்­தியக்­கூ­று­கள் இன்­னும் அதி­க­மா­கவே இருக்­கும் என்று நான் அவ­ருக்கு விளக்­கி­னேன். அவர் புரிந்­து­கொண்­டார்,” என்று பிர­த­மர் லீ சாட்­சி­ய­ம­ளித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!