சிங்கப்பூர் ராணுவ வீரர்களுக்கு புதிய தலைக்கவசம், சாதனங்கள்

சிங்­கப்­பூர் ராணுவ வீரர்­க­ளுக்கு மேம்­பட்ட தலைக்கவசங்களும் ராணு­வக் கரு­வி­க­ளைத் தாங்­கும் சாத­னங்­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் இருந்து, கமாண்டோ, காலாட் படை, காவல் படை போன்ற போர்ப் பிரி­வு­களில் உள்ள முழு நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்கு, ராணு­வக் கரு­வி­களைத் தாங்­கும் மேம்­பட்ட சாத­னங்­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

உடல்­வா­குக்கு ஏற்ற, உடல் சூட்­டைத் தணிக்­கும் இந்த மேம்­பட்ட சாத­னங்­கள், ராணுவ வீரர்­க­ளின் போர் தயார்­நி­லையை மேம்­ப­டுத்த உத­வும்.

வீரர்­க­ளின் ராணு­வக் கரு­வி­களைத் தாங்­கும் ‘ஸ்டாண்­டர்ட்’, ‘என்­ஹான்ஸ்ட்’ எனும் இரு­வகை சாத­னங்­கள் முதன்­மு­றை­யாக தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து பயன்­பாட்­டில் உள்ள சாத­னத்­திற்­குப் பதி­லாக அவை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

போர் ஆத­ரவு உள்­ளிட்ட மற்ற பிரி­வு­களில் இருக்­கும் முழு நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்கு அடுத்த ஆண்­டி­லி­ருந்து ‘ஸ்டாண்­டர்ட்’ வகை சாத­னங்­கள் வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூர் ராணுவம் இம்­மா­தம் அதன் 55வது ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வேளை­யில் இந்த அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அண்­மை­யில் லோயாங் பகு­தி­யில் உள்ள செல­ராங் முகா­மில் ராணுவ வீரர்­க­ளுக்­கான புதிய தலைக்­க­வ­ச­மும் ராணு­வக் கரு­வி­க­ளைத் தாங்­கும் சாத­ன­மும் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் காண்பிக்கப்­பட்­டன.

வெளிப்­புற சூழ­லில் ராணு­வப் பயிற்­சிக்­குத் தேவைப்­படும் தோட்­டாக்­கள், தொடர்­புச் சாத­னங்­கள், தண்­ணீர் போத்­தல்­கள் போன்­ற­வற்றை வீரர்­கள் தாங்­கு­வ­தற்கு இந்­தப் புதிய சாத­னம் வகை செய்­கிறது.

மேற்­கூ­றப்­பட்ட இரு­வகை சாத­னங்­களில் இடை­வா­ரும் சேர்ந்து வரு­கிறது. அதன் ஒரு பகுதி தோள்­பட்­டை­யி­லும் மறு­ப­குதி இடுப்­பி­லும் அணி­யப்­ப­டு­கிறது. உடல்­வா­குக்கு ஏற்­ற­வாறு சரி­செய்­து­கொள்­ளும் வசதி இரு­வகை சாத­னங்­க­ளி­லும் உண்டு.

கடந்த ஆண்டு ஜூலை­யி­ல் இருந்து ராணுவ வீரர்­க­ளின் பயிற்­சிக்கு இடை­வார் மட்­டும் வழங்­கப்­பட்டு வந்­தது. அடுத்­த­டுத்த பயிற்­சி­க­ளுக்­காக மற்ற பிரி­வு­களுக்கு அவர் செல்­லும்­போது அவர்­க­ளி­டம் ‘ஸ்டாண்­டர்ட்’ அல்­லது ‘என்­ஹான்ஸ்ட்’ மேல்சட்டை வழங்­கப்­ப­ட­லாம்.

ராணு­வக் கரு­வி­க­ளைத் தாங்­கும் இந்­தச் சாத­னங்­கள் வலு­வான, அதே வேளை­யில் இல­கு­வான பொரு­ளில் இருந்து தயா­ரிக்­கப்­படு­கின்­றன. இவை ராணுவ வீரர்­களுக்கு சௌக­ரி­யத்­தைத் தரு­வ­தோடு 30 விழுக்­காடு அளவு சூட்­டைத் தணிக்­க­வும் உத­வு­கின்­றன.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் இருந்து வழங்­கப்­பட்டு வரும் புதிய தலைக்­க­வ­சம், முந்­தைய வகை­யை­விட ஏறத்­தாழ 10 விழுக்­காடு எடை குறைவு.

தொடர்­புச் சாத­னங்­கள், இர­வில் பார்க்க உத­வும் சாத­னங்­கள் போன்ற தலை­யில் அணி­யக்­கூ­டிய சாத­னங்­க­ளு­டன் சேர்ந்து இந்­தத் தலைக்­க­வ­சம் அணி­வ­தற்­குப் பொருத்­த­மாக இருக்­கும்.

ராணுவ வீரர்­க­ளின் செயல்­தி­ற­னுக்­கான உன்­னத நிலை­யத்­தின் தலை­வ­ரான லெஃப்டி­னண்ட் கர்­னல் ஹோ சீ லியோங், இந்­தப் புதிய சாத­னம் வீரர்­க­ளுக்கு சௌக­ரி­யத்­தைத் தரு­வ­தோடு அவர்­க­ளது போர் ஆற்­றலை மேம்­ப­டுத்­தும் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!