பசிபிக் நாடுகளுடன் உடன்பாடு: 2021ல் கையெழுத்திட திட்டம்

பசிபிக் நாடுகளுடன் உடன்பாடு: 2021ல் கையெழுத்திட திட்டம்

2 mins read
25eff401-4f04-4dda-ad9e-c3c4d909519a
பசிபிக் கூட்டணி உச்சநிலைக் கூட்டத்தில் (இடமிருந்து) பிரதமர் லீ சியன் லூங், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர். படம்: தொடர்பு தகவல் அமைச்சு -

சிலி, கொலம்­பியா, மெக்­சிகோ, பெரு ஆகிய நாடு­கள் அடங்­கிய பசி­பிக் கூட்டணியுடன் கூடிய தாராள வர்த்­தக உடன்­பாட்­டில் அடுத்த ஆண்­டில் கையெ­ழுத்­திட சிங்­கப்­பூர் திட்­ட­மி­டு­கிறது.

மூன்று ஆண்­டு­கள் பேச்­சு­வார்த்தை நடந்­ததை அடுத்து பசி­பிக் கூட்­டணி- சிங்­கப்­பூர் தாராள வர்த்­தக உடன்­பாடு குறிப்­பி­டத்­தக்க முடி­வுக்கு வந்­துள்­ள­தாக பிர­தமரின் செய்­தித்­துறை செய­லா­ளர் திருவாட்டி சாங் லி லின் அறிக்ைக யில் தெரி­வித்­தார்.

பிர­த­மர் லீ சியன் லூங், முதன் முறை­யாக வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று பசி­பிக் கூட்­டணி உச்சநிலைக் கூட்­டத்­தில் காணொளி மூலம் கலந்துகொண்­டார். இந்­தக் கூட்­டத்தை சிலி, கொலம்­பியா, மெக்­சிகோ, பெரு ஆகிய நான்கு நாடு­களும் ஆண்­டு­தோ­றும் நடத்தி வரு­கின்­றன.

சிலி அதி­பர் ஏற்­பாடு செய்த அந்த 15வது உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் கொலம்­பியா, மெக்­சிகோ, பெரு நாடு­க­ளின் தலை­வர்­களும் பங்­கெ­டுத்­த­னர்.

சிங்­கப்­பூர், சிலி, மெக்­சிகோ ஆகிய நாடு­கள், பரந்த ஆசிய பசி­பிக் பங்­கா­ளித்­துவ முன்­னோட்ட உடன்­பாடு என்ற வேறு ஒரு தாராள வர்த்­தக உடன்­பாட்­டில் இடம்­பெற்று உள்­ளன. இத­னி­டையே, வர்த்­தக தொழில் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

"பசி­பிக் கூட்­டணி-சிங்­கப்­பூர் தாராள வர்த்­தக உடன்­பாடு அக­ல­மாகக் கத­வைத் திறந்­து­வி­டும்.

"வர்த்­த­கம் பெருக வகை செய்­யும். நிறு­வ­னங்­க­ளுக்­கும் மக்­க­ளுக்­கும் அதிக வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித்­த­ரும். இந்த குறிப்­பி­டத்­தக்க உடன்­பாடு தொடர்­பி­லான பேச்­சு­வார்த்­தை­கள் கணி­ச­மான அள­வுக்கு முடி­வ­டைந்து இருப்­பது எனக்கு ஊக்கமளிப்­ப­தாக இருக்­கிறது," என்று அந்த அறிக்­கை­யில் வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார். இந்­தச் செய்தி வர­வேற்­கத்தக்க ஒன்று என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

லத்­தின் அமெ­ரிக்க வர்த்­தக வட்­டா­ரம் உல­கின் எட்­டா­வது ஆகப்­பெ­ரிய பகு­தி­யாக இருக்­கிறது.

பசி­பிக் கூட்­டணி அமைப்­பின் இணை நாடு என்ற வகை­யில் வெள்­ளிக்­கி­ழமை நடந்த உச்ச நிலைக் கூட்­டத்­துக்கு சிங்­கப்­பூர் அழைக்­கப்­பட்டு இருந்­தது.

குறிப்புச் சொற்கள்