வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று

1 mins read
e6ed6e71-e85d-4502-bf2f-b0a74b1870a1
புதிதாக கிருமி தொற்றிய ஐவரையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,325ஆக உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதிதாக ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று (டிசம்பர் 14) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதிதாக கிருமி தொற்றிய ஐவரையும் சேர்த்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,325ஆக உள்ளது.

சமூக அளவிலோ வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலோ எவருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, சிங்கப்பூரில் நேற்று எழுவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்கிருமித்தொற்றுகொரோனா