'வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் 47 விழுக்காட்டினர் கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டனர்'

விடு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் கொவிட்-19 தொற்றை எதிர்­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நில­வரப்­படி, அத்­த­கைய ஊழி­யர்­கள் 54,505 பேர், ‘பிசி­ஆர்’ எனும் பல்­படி­யத் தொடர்­வி­னைச் சோதனை மூலம் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேலும் 98,289 பேரை கிருமி தொற்­றி­யி­ருந்­தது ‘சீரா­லஜி’ சோதனை மூலம் உறு­தி­செய்­யப்­பட்­டது.

இதை­ய­டுத்து, விடு­தி­க­ளைச் சேர்ந்த 152,794 ஊழி­யர்­க­ளுக்கு ‘பிசி­ஆர்’ அல்­லது ‘சீரா­லஜி’ அல்­லது இவ்­விரு சோத­னை­கள் மூல­மும் கொரோனா பாதிப்பு இருந்­தது கண்­ட­றி­யப்­பட்­டது.

விடு­தி­களில் மொத்­தம் 323,000 ஊழி­யர்­கள் தங்­கி­யுள்ள நிலை­யில் அவர்­களில் 47 விழுக்­காட்­டி­ன­ரைக் கிருமி தொற்­றி­விட்­ட­தா­கச் சுகா­தார அமைச்­சும் மனி­த­வள அமைச்­சும் ஒரு கூட்­ட­றிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளன.

மேலும் 65,000 ஊழி­யர்­க­ளுக்கு ‘சீரா­லஜி’ சோதனை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சு­கள் குறிப்­பிட்­டன.

இப்­போது ஒரு­வர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதை ‘பிசி­ஆர்’ சோதனை மூலம் கண்­ட­றி­ய­லாம். கிரு­மித்­தொற்­றால் முன்­னர் பாதிக்­கப்­பட்­டதைக் கண்­ட­றிய ‘சீரா­லஜி’ சோதனை உத­வு­கிறது.

இவ்­விரு சோத­னை­கள் மூல­மா­கக் கிரு­மித்­தொற்­றி­யது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு அதற்­கான அறி­கு­றி­களே இல்லை அல்­லது இலே­சான அறி­கு­றி­களே தென்­பட்­டன என்று கூறப்­பட்­டது.

அவர்­களில் ஐவ­ரில் ஒரு­வ­ரி­டம் மட்­டுமே கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் காணப்­பட்­டன எனச் சொல்­லப்­பட்­டது.

கடந்த ஆகஸ்ட் மாத­வாக்­கில், விடு­தி­களில் வசிக்­கும் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் குறைந்­தது ஒரு­மு­றை­யே­னும் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

கடந்த மார்ச் 25ஆம் தேதிக்­குப் பிறகு, அக்­டோ­பர் 13ஆம் தேதி­தான் முதன்­மு­றை­யாக விடுதி­களில் புதி­தா­கக் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வம் எது­வும் பதி­வா­க­வில்லை. அதன்­பி­றகு தொடர்ந்து இரு மாதங்­க­ளாக விடு­தி­களில் கிருமி பாதிப்பு குறை­வா­கவே இருந்து வரு­கிறது என்று மனி­த­வள இரண்­டாம் அமைச்­சர் டான் சீ லெங் கூறி­னார்.

நவம்­பர் மாதத் தொடக்க நில­வ­ரப்­படி, 98 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் தங்­க­ளது வேலை­களை மீண்­டும் தொடங்க அனு­ம­திக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

விடுதி நடத்­து­நர்­கள், முத­லாளி­கள், அரசு சாரா அமைப்­பு­கள், அனைத்து அமைப்பு பணிக்­கு­ழு­வைச் சேர்ந்த கிட்­டத்­தட்ட 3,000 அதி­கா­ரி­கள், தொண்­டூ­ழி­யர்­கள் ஆகி­யோர் கைகொ­டுத்­த­தால் இது சாத்­தி­ய­மா­னது என்று டாக்­டர் டான் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!