95,000 முதலாளிகளுக்கு $ 1பி. சம்பள உதவித்தொகை வழங்கீடுகள்

95,000 முதலாளிகளுக்கு $ 1பி. சம்பள உதவித்தொகை வழங்கீடுகள்

2 mins read
441f896b-a9c9-4d4a-8ec4-b9bb301a9f55
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சம்­பள உத­வித்­தொகைத் திட்­டத்­தின் கீழ் 95,000க்கு மேற்­பட்ட சிங்­கப்­பூர் முத­லா­ளி­கள் இந்த ஆண்­டில் $1 பில்­லி­யன் மதிப்­புள்ள சம்­ப­ள உத­வித்­தொகை வழங்­கீ­டு­களைப் பெற்­றுள்­ள­னர்.

சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் ஊதி­யம் கொடுக்கும் அவர்­களின் செல­வு­களை ஈடு­கட்ட அந்த முத­லா­ளி­க­ளுக்கு உத­வித்­தொகை வழங்­கப்­பட்­டது.

அடுத்த தொகுதி வழங்­கீ­டு­கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் வழங்­கப்­படும் என்று நிதி அமைச்சு, உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் ஆகி­யவை நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­வித்­தன.

இந்த வழங்­கீ­டு­க­ளுக்கு முத­லா­ளி­கள் விண்­ணப்­பிக்­கத் தேவை­யில்லை. இந்த வழங்­கீ­டு­க­ளுக்­குத் தகுதி பெற்­ற­வர்­கள் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறு­திக்­குள் அது குறித்த நினை­வூட்­ட­லைப் பெறு­வார்­கள்.

எட்­டாம் தொகுதி வழங்­கீ­டு­களுக்­கான தகு­தி­யைப் பெற முத­லா­ளி­கள், மாதம் $5,000 வரை மொத்த சம்பளம் பெறும் தங்­க­ளின் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­தைக் குறைந்­தது $50 உயர்த்­தி­யி­ருக்க வேண்­டும் அல்­லது 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு ஆண்­டு­கள் ஊழி­யர்­களின் சம்­ப­ளத்­தில் குறைந்­தது $50 உயர்த்­தப்­பட்ட நிலையை முதலாளிகள் மாற்­றா­மல் இருந்­தி­ருக்க வேண்­டும்.

தங்­கள் ஊழி­யர்­க­ளின் இந்த ஆண்­டுக்­கான கட்­டாய மத்­திய சேம நிதிச் சந்­தாவை முத­லா­ளி­கள் ஜன­வரி மாதம் 14ஆம் தேதிக்­குள் செலுத்த வேண்­டும்.

இந்­தச் சம்­ப­ள உத­வித்­தொகை வழங்­கீ­டு­கள் முத­லா­ளி­க­ளின் வங்­கிக் கணக்­கு­களில் 'பேநவ் கார்ப்­ப­ரெட்' அல்­லது 'ஜைரோ' பரி­வர்த்­தனை மூலம் சேர்ப்­பிக்­கப்­படும்.

முத­லா­ளி­கள் 'பேநவ் கார்ப்­ப­ரெட்' பரி­வர்த்­த­னைக் கணக்கை உரு­வாக்க வேண்­டும் அல்­லது அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாத இறு­திக்­குள் 'ஜைரோ' பரி­வர்த்­த­னைக் கணக்கை உரு­வாக்க வேண்­டும் என்று நிதி அமைச்சு, உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யம் ஆகி­யவை முத­லா­ளி­க­ளைக் கேட்டுக்கொண்­டன.

இந்த ஆண்டு இரண்டு சுற்று சம்­ப­ளத் உத­வித்­தொகை வழங்­கீடு­கள் கொடுக்­கப்­பட்­டன.

இந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் கொடுக்­கப்­பட்ட பிர­தான வழங்­கீடு­கள் நீங்­க­லாக, முத­லா­ளி­கள் இரண்­டாம் சுற்று வழங்­கீ­டு­களை இந்த ஆண்டு ஜூன் மாதத்­தில் பெற்­றுக் கொண்­ட­னர்.

அது கொவிட்-19 நோய்ப் பர­வலை எதிர்த்­துப் போரிட அறி­விக்­கப்­பட்ட $6.4 பில்­லி­யன் மதிப்­புள்ள ஒற்­றுமை வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக வழங்­கப்­பட்­டது.

இத்­திட்­டம் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு, முத­லா­ளி­கள் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­தின் இணையத் தளம் அல்­லது 1800-352-4727 எனும் அதன் நேர­டித் தொலை­பேசி எண்ணை அழைக்­க­லாம்.

பட்­ஜெட் 2020ல், சம்­ப­ள உத­வித்­தொகை திட்­டம் விரி­வுப்­ப­டுத்­தப்­பட்­டது. வழங்கீடுகளுக்குத் தகுதி பெற, ஊழி­யர்­க­ளின் மாதாந்­திர சம்­பள வரம்பு 2019, 2020 ஆண்­டு­களில் $4,000லிருந்து $5,000க்கு உயர்த்­தப்­பட்­டது.

அரசாங்கத்தில் நிதி ஆதரவு முறையே 2019ல் 20%ம், 2020ல் 15% என்று உயர்த்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்