பிப்ரவரி 16ல் சிங்கப்பூரின் 2021க்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல்

பிப்ரவரி 16ல் சிங்கப்பூரின் 2021க்கான வரவு செலவுத் திட்டம் தாக்கல்

1 mins read
ae1e57e6-a838-43ba-8034-3c70aa0f842e
சிங்கப்பூரின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான திரு ஹெங் சுவீ கியட் வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தத் தகவலை நிதி அமைச்சு இன்று அறிவித்தது.

வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை தொலைக்காட்சி, வானொலி மூலம் காணலாம். Singapore Budget இணையப்பக்கத்திலும் நேரலையாக அது ஒளிபரப்பப்படும்.

தடுப்பூசி போடப்படுவதை அடுத்து கொவிட்-19 தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எதிர்காலம் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அது சரியாக இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் திரு ஹெங் குறிப்பிட்டுள்ளார்.

"எதிர்பார்க்கப்படுவதுபோல பொருளியல் மீட்சி அடைந்தால் 'பாரம்பரிய' வரவுசெலவுத் திட்டம் கைகொடுக்கும். ஆனால், சூழ்நிலை மோசமானால், அதனைக் கையாளவும் தயாராக இருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021க்கான வரவுசெலவுத் திட்டம் பற்றிய தங்களது கருத்துகளை சிங்கப்பூரர்கள் ஜனவரி 8 வரை பகிர்ந்து கொள்ள பல தளங்கள் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் சுமார் $100 பில்லியன் கொவிட்-19 ஆதரவு நடவடிக்கைகளுக்காக நான்கு வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்கப்பட்டன. $52 பில்லியன் நாட்டின் சேமிப்பிலிருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வரவுசெலவுத் திட்டம்