சிங்கப்பூரில் இன்றும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 3 சம்பவங்கள்

சிங்கப்பூரில் இன்றும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் 3 சம்பவங்கள்

2 mins read
6468a5df-d9a3-4536-8c29-7393d481f8d4
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் நேற்றைப்போலவே இன்றும் (ஜனவரி 1) புதிதாக 30 பேருக்கு கொவிட்-19 பதிவானது. அதில் 3 சம்பவங்கள் உள்ளூர் சமூகத்தில் உறுதிப் படுத்தப்பட்டவை.

மற்ற 27 பேரும் வெளிநாடுகளிலிருந்து வந்த பிறகு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று பதிவான சம்பவங்களையும் சேர்த்து இங்கு மொத்தம் 58,629 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரில் இருவர் ஏற்கெனவே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மெரைன் சர்வேயரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஹார்பர் பைலட்டின் குடும்ப உறுப்பினர் ஒருவர் ஆகியோர் அவர்கள்.

கடந்த மாதம் 23ஆம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்த ராபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவி ஒருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மெரைன் சர்வேயரின் குடும்ப உறுப்பினர் அந்த 14 வயதுச் சிறுமி.

அந்தக் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரான 46 வயது நிரந்தரவாசி, கிம் மோ ரோட்டில் இருக்கும் தம் வீட்டிலேயே பகுதி நேரமாக பூ விற்பனையாளராக இருக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 30ஆம் தேதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளூர் சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மூன்றாவது நபர் 55 வாய்த் உசிங்கப்பூரர். அவர் வெஸ்ட் கோஸ்டின் ஃபெர்ரி ரோட்டில் உள்ள பிஎஸ்ஏ மெரைன் நிறுவனத்தில் ஹார்பர் பைலட்டாக பணிபுரிபவர்.

கடந்த மாதம் 13ஆம் தேதி அவர் 7 பேருடன் பார்க்வே பரேடுக்கு சென்றிருந்ததாகக் கூறப்பட்டது. அவர் மரின் கிரசென்டில் இருக்கும் தம் உறவினரையும் அடிக்கடி பார்க்கச் சென்றதும் தெரிய வந்துள்ளது. பார்க்வே பரேடுக்கு சென்ற போது கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் ஏதாவது மீறப்பட்டதா என்பதைப் பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட மற்ற இருவர் 79 வயது சிங்கப்பூர் பெண்மணி, 50 வயது சிங்கப்பூர் ஆடவர் ஆகியோர். அவர்கள் இருவரும் மரின் கிரசென்டில் வசிக்கும் 55 வயது ஆடவரின் உறவினர்கள்.

குறிப்புச் சொற்கள்