மத்­திய சேம நிதி­யின் ஓய்­வுக்­கால கணக்­கில் பணம் நிரப்­பும் திட்­டத்­தின் ­கீழ் 440,000 பேர் பயன்பெறுவர்

மத்­திய சேம நிதி­யின் ஓய்­வுக்­கால கணக்­கில் பணம் நிரப்­பும் திட்­டத்­தின் ­கீழ் 440,000 பேர் பயன்பெறுவர்

2 mins read
30d248d8-3202-4a88-af37-ab91d87969ed
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மத்­திய சேம நிதி­யின் ஓய்­வுக்­கால கணக்­கில் பணம் நிரப்­பும் திட்­டத்­தின் ­கீழ் மொத்­தம் 440,000 பேர் பயன்­பெ­று­வர்.

இவ்­வாண்டு நடப்­புக்கு வரும் இந்­தப் புதிய திட்­டத்­தின்­படி, இவர்­கள் தங்­கள் ஓய்­வுக்­கால கணக்­கில் ஆண்­டொன்­றுக்கு $600 வரை பண நிரப்­பு­த­லைப் பெற­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இவர்­களில் கிட்­டத்­தட்ட 53 விழுக்­காட்­டி­னர் 55 வய­துக்­கும் 70 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள் என்று மத்­திய சேம நிதிக் கழ­கம் நேற்­றுத் தெரி­வித்­தது.

'மேட்ச்டு ரிட்டை­யர்­மண்ட் சேவிங்ஸ் ஸ்கீம்' என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்­தத் திட்­டம் சென்ற ஆண்டு அறி­விக்­கப்­பட்­டது. மத்திய சேம நிதிக் கழக முதிய உறுப்­பி­னர்­கள் தங்­கள் ஓய்­வுக்­கால கணக்­கில் குறைந்­த­பட்ச ஓய்­வுக்­கால நிதி­யைப் பெற்­றி­ருக்க உதவி புரி­யும் நோக்­கில் இத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­மூ­லம், ஒரு­வ­ரின் சேம நிதி ஓய்­வுக்­கால கணக்­கில் அவரது குடும்ப உறுப்­பி­னர்­களோ, முத­லா­ளி­களோ, அல்­லது சமூ­கத்­தைச் சேர்ந்த ஒரு­வரோ பணம் நிரப்­ப­லாம்.

இதில் நிரப்­பப்­படும் ஒவ்­வொரு வெள்­ளிக்­கும் ஈடாக அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு, ஆண்­டொன்­றுக்கு $600 என்ற வரம்பிற்கு உட்­பட்டு, அர­சாங்­க­மும் பணம் நிரப்­பும்.

இந்­தப் பணம் நிரப்­பு­தல் மசேநி கழ­கத்­தின் இணை­யத்­த­ளம் மூல­மா­கவோ, கைபேசி செயலி மூல­மா­கவோ ஒரு­வர் செய்­ய­லாம்.

மேலும், பணம் நிரப்­பும்­போது மொத்­த­மாக ஒரு தொகையைப் போட வேண்­டு­மென்­ப­தில்லை. ஜைரோ மூல­மாக அவ்­வப்­போது சிறு சிறு தொகை­யாக ஆண்­டொன்­றுக்கு குறிப்­பிட்ட தொகை ஒன்றை நிரப்­பி­னா­லும் அதற்­கேற்­ற­வாறு அர­சாங்­கம் நிரப்­பும் தொகை­யைப் ெபற்­றுக்­கொள்­ள­லாம்.

"55 வயதை எட்டிய மத்­திய சேம நிதிக் கழக உறுப்­பி­னர்­களில் பாதிப் பேரிடம் இன்­ன­மும் குறைந்த­பட்ச ஓய்­வுக்­கால நிதி இல்லை. அரசாங்­கத்­தின் இந்­தப் பணம் நிரப்­பும் திட்­டம் பலர் தங்­க­ளது சேம நிதிக் கணக்­கில் பணம் சேமிக்க ஊக்கு­விக்­கும்," என்று கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி ஆகஸ்­டின் லீ கூறி­னார்.

"சேமிப்­பு­க­ளுக்கு சேம நிதிக் கழ­கம் வழங்­கக்­கூ­டிய வட்டி விகி­தத்­தைக் காட்­டி­லும் நல்ல வட்டி விகி­தம் வேறெங்­கும் கிடைக்­காது. முதி­ய­வர்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­களும் பரந்த சமூகத்­தின் உறுப்­பி­னர்­களும் சேம நிதிக் கழக உறுப்­பி­னர்­க­ளின் ஓய்­வுக்­கால தேவையைப் பூர்த்தி செய்ய உத­வுவர் என நாங்­கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

"சிறுசிறு தொகை­யாக தொடர்ந்து நிரப்­பி­னா­லும் அது இவர்­க­ளின் ஓய்­வுக்­காலத் தேவைகளைப் பூர்த்திசெய்ய உதவும்," என்றார் அவர்.

இந்­தத் திட்­டத்­தில் பங்­கு­பெற ஒரு­வர் 55 வய­தி­லி­ருந்து 70 வய­துக்கு உட்­பட்­ட­வ­ரா­க­வும் அவ­ரது ஓய்­வுக்­கா­லக் கணக்­கில் குறைந்­த­பட்ச அள­வான 93,000 வெள்­ளிக்குக் குறை­வா­க­வும் இருப்­பது அவசி­யம்.

குறிப்புச் சொற்கள்